வரும் ஜனவரி 15-ம் தேதி முதல் கேபிள் டிவி ஆப்ரேட்டர்கள் புதிப்பிக்கப்பட்ட கட்டண முறைகளை தொலைக்காட்சி திரையில் அறிவிக்க வேண்டும் என்றும் விநியோக தள ஆப்ரேட்டர்கள் வரும் ஜனவரி 30-ம் தேதிக்குள் புதிய கட்டண விதிமுறைகளை அறிவிக்க வேண்டும் என்றும் இந்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான ட்ராய் தற்போது அறிவித்துள்ளது. இந்த புதிய விதியின் அடிப்படையில் சன் டைரக்ட், டிஷ் டிவி, d2h ,டாடா ஸ்கை, ஏர்டெல் டிஜிட்டல் டிவி ஆகிய வாடிக்கையாளர்கள் பயன் பெறுவர். மேலும், 200 சேனல்களை பார்ப்பதற்க்கு மாதத்துக்கு 130 ரூபாய் கட்டணம் (வரி உட்பட) என்ற மதிப்பில் கிடைக்கும். இதற்க்கு முன்னதாக 130 ரூபாய்க்கு 100 சேனல்கள் மட்டுமே வழங்கிக்கொண்டு இருந்தது. மேலும், ஒவ்வொரு கூடுதல் 20 சேனல்களுக்கும் 25 ரூபாய் கட்டணமாய் விதிக்கப்படும். இந்தக் கட்டண அமைப்புக்குள் தூர்தர்ஷன் சேனல் மட்டும் அடங்காது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இந்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான ட்ராயின் அறிவிப்பு தொலைக்காட்சி பிரியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
டெல்லி : கடந்த 2 நாட்களாக நாடாளுமன்ற வளாகம் மிக பரபரப்பாக இயங்கி வருகிறது. அதிலும் இன்று நாடாளுமன்ற வளாகத்தில்…
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…
சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…