மீண்டும் பாலிவுட்டில் நேர்ந்த சோகம்.! பிரபல முன்னாள் ஹீரோயின் காலமானார்.!

பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகையான கும்கும் வயது முதிர்வு காரணமாக காலமானார்.
கடந்த சில மாதங்களாக பாலிவுட் திரையுலகம் பல பிரபலங்களை இழந்துள்ளது. இர்பான்கான் உட்பட ரிஷி கபூர், சுஷாந்த் சிங், காமெடி நடிகர் ஜக்தீஷ் என பலர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் தற்போது 50ஸ் மற்றும் 60ஸ் களில் முன்னணி நடிகையாக இருந்தவர் கும்கும்.
மிஸ்டர் எக்ஸ் இன் பாம்பே, மதர் இண்டியா, சன் ஆப் இண்டியா என சுமார் 115 படங்களில் நடித்த இவர் வயது முதிர்வின் காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் 86 வயதான கும்கும் இன்று காலை வயது முதிர்வு காரணமாக மரணமடைந்துள்ளார். அவரது மறைவுக்கு பல திரையுலக பிரபலங்கள் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.