ஆஸ்திரேலிய பெண்ணிற்கு இந்தியாவில் நடந்த சோகம்.! 2 மாதம் அனுபவித்த பாலியல் கொடுமையை புத்தகமாக வெளியீடு.!

Default Image

ஆஸ்திரேலிய பெண் ஒருவர் இந்தியாவிற்கு  வந்த போது அவரிடம் அறிமுகமான நபர் 2 மாதம் வரை பாலியல் கொடுமை செய்த சம்பவத்தை புத்தகமாக வெளியிட்டுள்ளார்.

ஆஸ்திரேலியாவை சேர்ந்த கார்மென் கிரீன்ரீ தனது இளமை காலத்தில் கடல் மீது சாகசம் செய்யும் பயிற்சியை தொடர்ந்து 7 வருடங்களாக தீவிரமாக மேற்கொண்டு வந்துள்ளார். ஆனால் அவரால் உலக சுற்றுப்பயணத்திற்கு தகுதி பெற முடியாததை அடுத்து மிகவும் மனமுடைந்து காணப்பட்டுள்ளார். தனக்கு மாறுதல் தேவைப்பட்ட அந்த நேரத்தில் தலாய் லாமாவின் கீழ் படிக்க இமயமலைக்கு செல்ல தனது 22 வயதில் திட்டமிட்டுள்ளார். அப்போது அங்கு நடந்த கொடூர சம்பவத்தை ஒரு புத்தகமாக வெளியிட்டுள்ளார்.

இமயமலைக்கு செல்ல திட்டமிட்ட கார்மென் டெல்லி வழியாக புறப்பட நினைத்து அங்கு சென்றுள்ளார். அதனையடுத்து உள்ளூரில் ஒருவரின் உதவியை நாடிய கார்மெனிடம், ஒருவர் தாம் ஒருவரை அறிமுகப்படுத்துவதாக கூறி காஷ்மீரில் அழைத்து சென்றார். அங்கு அறிமுகமான நபர், தலாய் லாமாவை சந்திக்க தர்மஷாலாவுக்கு புறப்படுவதற்கு முன்பு தனது படகு வீட்டில் தங்குமாறும், அதுவே பாதுகாப்பானது என்று கூறியுள்ளார். ஆனால் கார்மெனுக்கு அடுத்த சில நாட்களில் தான் அவரிடம் சிக்கி கொண்டது தெரிய வந்துள்ளது. அதனையடுத்து அந்த நபர் எத்தனையோ முறை தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும், அந்த இரவுகள் அனைத்தும் தனக்கு நரகம் தான் என்றும் கார்மென் கூறினார். இதனிடையே தனது தோழி ஆபத்தில் சிக்கியிருக்க வாய்ப்புள்ளதாக கார்மெனின் நண்பர் ஒருவர் ஆஸ்திரேலியா தூதரகத்தில் புகார் அளித்ததை அடுத்து விசாரணை நடத்தினர்.

அப்போது அந்த நபர் கார்மெனை மிரட்டி வலுக்கட்டாயமாக ஆஸ்திரேலியாவில் இருக்கும் தனது பெற்றோர்களிடம் தொலைபேசியில் தொடர்பு செய்ததன் மூலம் காவல்துறையினருக்கு அவரை கண்டுபிடிக்க முடிந்தது. அந்த இரண்டு மாதங்களில் கார்மென் பட்ட கஷ்டங்கள் அனைத்தையும் புத்தமாக தொகுத்து வழங்கியுள்ளார். அதனையடுத்து தன்னை பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டதாகவும், இனி தான் இந்தியாவிற்கு செல்ல விரும்பவில்லை என்றும் கார்மென் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்