இசைஞானியின் குடும்பத்தில் நேர்ந்த சோகம்.!
இசைஞானி இளையராஜாவின் மைத்துனரான சசிதரன் காலமாகி உள்ளார்.
தமிழ் சினிமாவின் இசைஞானி இளையராஜா ஏற்கனவே அவரது நெருங்கிய நண்பரான எஸ்பிபி அவர்களின் இழப்பை நம்ப முடியாமல் உள்ள நிலையில் தற்போது அவரது குடும்பத்தில் மேலும் ஒரு இழப்பு நேர்ந்துள்ளது .அதாவது இளையராஜாவின் மனைவி ஜீவாவின் சகோதரரும் , இளையராஜாவின் மைத்துனருமான சசிதரன் காலமாகி உள்ளார் .
இசைஞானி இளையராஜாவின் குழுவில் பேஸ் கிட்டாரிஸ்ட்டாக இருந்த சசிதரன் , தமிழகத்தில் பேஸ் கிட்டார் இசை பிரபலமாக முக்கிய காரணமாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது .அது மட்டுமின்றி இசைஞானியின் பல ஹிட் பாடல்களுக்கு பேஸ் கிட்டார் வாசித்த பெருமையும் இவருக்கே சாரும் . தற்போது இவரது மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் பலர் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.