பிக்பாஸ் லாஸ்லியாவின் குடும்பத்தில் நேர்ந்த சோகம் .!
பிக்பாஸ் லாஸ்லியாவின் தந்தை திடீரென மரணமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒவ்வொரு சீசனிலும் ஒவ்வொரு நபர்கள் ரசிகர்களுக்கு பேவரட்டாக இருப்பார்கள். அந்த வகையில் கடந்த பிக்பாஸ் சீசன் 3-ல் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் லாஸ்லியா . இலங்கையை சேர்ந்த இவர் முதலில் செய்தி வாசிப்பாளராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது .
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் லாஸ்லியா மட்டுமின்றி அவரது தந்தையான மரியநேசனும் மிகவும் பிரபலமானார் . தந்தை ,மகளின் பாசத்தை கண்டு அனைவரது கண்களிலுமே கண்ணீர் வந்தது என்றே கூறலாம் . அவரது மகளிடம் அன்பால் கண்டித்த பின்னர் தான் லாஸ்லியா தனது விளையாட்டை பிக்பாஸில் விளையாட தொடங்கினார் . தற்போது பல படங்களில் கமிட்டாகியுள்ள லாஸ்லியாவின் குடும்பத்தில் ஒரு சோக நிகழ்வு நடந்துள்ளது .
அதாவது லாஸ்லியாவின் தந்தை திடீரென மரணமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன .இதனை தனது டுவிட்டர் பக்கத்தில் லாஸ்லியா தெரிவித்துள்ளார்.இது ரசிகர்கள் பலருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மேலும் பலர் லாஸ்லியாவின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்ததுடன் மரியநேசனின் ஆத்மா சாந்தி அடைய இறைவனிடம் பிரார்த்தனை செய்து வருவதாகவும் தெரிவித்து வருகின்றனர்.
???????????? pic.twitter.com/WXTTIcrfGL
— Losliya Mariyanesan ▫️▫️▫️▫️▫️▫️▫️▫️▫️▫️ᴾᵃʳᵒᵈʸ (@Losliyamaria96) November 15, 2020