சீனாவில் உள்ள பிரபல சந்தையில் அதிக அளவில் பரவிய கொரோனா.. இதுதான் காரணம்!

Default Image

பெய்ஜிங்கில் உள்ள ஜின்ஃபாடி மொத்த உணவு சந்தையின் கடல் உணவு மற்றும் இறைச்சி பிரிவுகளில் கொரோனா வைரஸுகான தடயங்கள் அதிகளவில் உள்ளதாக சீனா கண்டறிந்துள்ளது.

சீனாவில் 83 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில், அதன் தாக்கம் குறைந்துள்ளது. இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு பிறகு, கொரோனா வைரஸின் தாக்கம் மீண்டும் அதிகரித்து வருகின்றன. மேலும், பெய்ஜிங்கில் கொரோனா வைரஸால் தற்பொழுது 100க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்ட நிலையில், அங்கு கொரோனாவின் இரண்டாவது அலை உருவாகி உள்ளதாக அச்சம் எழுந்துள்ளது.

இதில் அதிகபட்சமாக, பிரபல ஜின்ஃபாடி மொத்த உணவு சந்தையில் இறைச்சி மற்றும் கடல் உணவுகளுக்கான வர்த்தக பிரிவுகளில் பணிபுரிந்த பணியாளர்கள் பலருக்கும் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. மேலும், அங்கு பணிபுரிந்த பலருக்கும் சோதனை நடத்தபட்டது.

இந்நிலையில், இந்த உணவு சந்தை மூலம் கொரோனா தொற்று அதிகம் பரவி வருவதால், இதுகுறித்து சீன அதிகாரிகள் ஆய்வுகள் மேற்கொண்டனர். அந்த ஆய்வுகளின் முடிவுகளில், ஜின்ஃபாடி சந்தையில் கொரோனா தொற்று உறுதியான பணியாளர்கள் பெரும்பாலானவர்கள், கடல் உணவு மற்றும் இறைச்சி பிரிவுகளில் பணிபுரிபவர்கள்.

மேலும், அங்கு தொற்று பரவ காரணம், இந்தப்பகுதிகளில் குறைந்த வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் ஆகியவை. இது கொரோனா தொற்று பரவ முக்கிய காரணம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும், ஜின்ஃபாடி உணவு சந்தை மூலம் இதுவரை 80க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அந்த சந்தை மூடப்பட்டது. அதுமட்டுமின்றி, அந்த சந்தையை சுற்றி உள்ள குடியிருப்பு பகுதிகள் மற்றும் பள்ளிகள் மூடப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

ICC CT 2025 INDvNZ - TN CM MK Stalin
live ilayaraja
rahul gandhi bjp
good bad ugly - gv prakash
India vs New Zealand Final
tvk poster
TVKVijay - TN govt
MKStalin - PINK AUTO