இந்த வருடத்தில் மாலத்தீவை நோக்கி அதிமான அளவு சுற்றுலாப்பயணிகள் செல்வதாக தகவல் வெளிவந்துள்ளது.
கடந்த வருடமான 2020-இல் கொரோனாவின் காரணமாக மாலத்தீவிற்கு செல்லும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை குறைந்தது. இந்நிலையில் தற்போது மாலத்தீவில் சுற்றுலாத்துறை அமைச்சகம் தெரிவித்ததாவது, கடந்த ஆண்டை விட இந்த ஆண்டில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்திருப்பதாக தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டின் துவக்கத்திலிருந்து தற்போதுள்ள ஜூலை மாதம் வரை இங்கு 5,59,000 சுற்றுலாப்பயணிகள் வருகை தந்துள்ளனர். இது கடந்த வருடமான 2020 ஆம் ஆண்டு வருகை தந்த மொத்த பயணிகளின் எண்ணிக்கையை விட குறைவு என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இது குறித்து தெரிவித்த சுற்றுலாத்துறை அமைச்சர் அப்துல்லா மஸூம், மாலத்தீவிற்கு தினசரி பயணிகளின் வருகை 5,000 ஆக உள்ளது. இதனால் இந்த ஆண்டின் இறுதிக்குள் இங்கு கிட்டத்தட்ட 1.30 கோடி சுற்றுலாப்பயணிகள் வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இங்கு வரும் பயணிகளில் 23% பயணிகள் தெற்கு ஆசிய அண்டை நாடுகளிலிருந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
சென்னை : இயக்குநர் சுகுமார், நடிகர் அல்லு அர்ஜூன் கூட்டணியில் உருவாகி இருக்கும் 'புஷ்பா 2' திரைப்படம் வரும் டிசம்பர்…
தருமபுரி : தவெக தலைவர் விஜய், 2026 தேர்தலில் தாம் போட்டியிட இருக்கும் தொகுதி குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.…
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…
சென்னை : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், நடிகை கஸ்தூரியை வருகிற 29ஆம் தேதி வரை நீதிமன்றக்…
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த கைலாஷ் கெலாட் தனது அமைச்சர் பதவி மற்றும் ஆம்…
சான் பிரான்சிஸ்கோ : உலக பணக்காரர்களில் முதன்மையானவர்களாக இருக்கும் எலான் மஸ்க், தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் மூலம்…