தமிழகத்தில் மாஸ்டர் திரைப்படத்தின் டாப் வசூல்- எவ்வளவு தெரியுமா?
மாஸ்டர் திரைப்படம் இதுவரை தமிழகத்தில் மட்டும் 95 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்களின் இயக்கத்தில் நடிகர் விஜய், அவருக்கு ஜோடியாக மாளவிகா மோஹனன் மற்றும் வில்லனாக விஜய் சேதுபதி நடிபில் பொங்கலை முன்னிட்டு வெளியிடப்பட்ட மாஸ்டர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. விமர்சனம் ரீதியாக சில எதிர்மறையான கருத்துக்களை பெற்றாலும், வசூல் ரீதியாக படம் நல்ல சாதனையை படைத்தது கொண்டிருக்கிறது.
இதுவரை மாஸ்டர் படம் தமிழகத்தில் மட்டும் 95 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாம், சென்னையில் மட்டும் இதுவரை 6 கோடி வசூல் செய்துள்ளது. வார இறுதி நாட்களில் வசூல் இன்னும் எகிறி வருகிறது.எனவே, இன்னும் படத்தின் வசூல் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.