இந்தியாவில் விற்பனையில் கலக்கி வரும் டாப் 5 ஸ்கூட்டர்ஸ் லிஸ்ட் இதோ…

Published by
மணிகண்டன்

இந்தியாவில் இரு சக்கர வாகன விற்பனைகளில் கியர் வண்டிகளுக்கு இணையாக ஸ்கூட்டர் வகை வாகனங்களுக்கான விற்பனையும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தற்போது விற்பனையில் கலக்கி கொண்டிருக்கும் பிஎஸ்-6 ரக மாசு ஸ்கூட்டர் வாகனங்களில் மிக சிறந்த 5 ஸ்கூட்டர் மாடல்கள் எவையென கிழே பார்க்கலாம்.
சுஸூகி ஆக்செஸ் 125:
சுஸூகி மோட்டார்ஸ் விற்பனையில்  பங்களிப்பினை முக்கிய பங்கு வகிக்கும் மாடலாக ஆக்ஸஸ் 125 இருக்கிறது. இந்த வாகனம் அதிகபட்சமாக 60 கிமீ மைலேஜ் வழங்கும் திறன் கொண்டது. இந்த மாடல் பிஎஸ் 6  Fi வசதி என்ஜின் பெற்றுள்ளது.

இந்த ஸ்கூட்டரில் 124 சிசி எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. 6750 ஆர்.பி.எம், 8.7 பிஎஸ் பவர், மற்றும் அதே நேரத்தில் 5500 ஆர்.பி.எம், 10 என்எம் டார்க் திறன் வழங்கும்.  இந்த ஆக்சஸ் 125 வாகனமானது 70 ஆயிரம் முதல் 75 ஆயிரம் வரையில் வெவ்வேறு வசதிகளுடன் விற்பனைக்கு உள்ளது.
டிவிஎஸ் ஜூபிடர்
இந்தியாவில் அதிகமாக விற்பனையாகும் ஸ்கூட்டர் மாடலாக உள்ளது ஜூபிடர் 110 சிசி ஸ்கூட்டர். இதில்,  FI பெற்று 7,000 ஆர்.பி.எம், 7.37 ஹெச்பி பவர் மற்றும்  5500 ஆர்.பி.எம், 8.4 என்எம் டார்க் வழங்கும் திறன் கொண்டது. இந்த மாடல் சராசரியாக 60 கிமீ முதல் 62 கிமீ மைலேஸ் தருகிறது.

ஜூபிடர் விலை ரூ. 65,330*-எனவும், ஜூபிடர் ZX விலை ரூ. 67,330* எனவும், டிவிஎஸ் ஜூபிடர் கிளாசிக் விலை ரூ. 73,111* எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஹோண்டா ஆக்டிவா 6ஜி
ஆக்டிவா 6ஜி ஸ்கூட்டரில் Fi பெற்ற  ஃபயூவல் இன்ஜெக்‌ஷன் உடன் கூடிய 109.51 சிசி HET என்ஜின் உள்ளது. ஃபேன் கூல்டு என்ஜின் அதிகபட்சமாக 7500 ஆர்பிஎம், 7.79 பி.எச்.பி பவர் மற்றும்  5,250 ஆர்பிஎம்-ல் 8.79 என்எம் டார்க் திறனை வழங்குகின்றது. இந்த வாகனம் லிட்டருக்கு சராசரியாக 60 கிமீ மைலேஜ் வழங்கும் என கூறப்படுகிறது.

ஹோண்டா ஆக்டிவா 6ஜி டிரம் பிரேக் வேரியண்டின் ஆரம்ப விலை ரூ.67,888-ஆகவும், முன்புற டிஸ்க் பிரேக் வேரியண்ட் விலை ரூ.69,188 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
யமஹா ஃபேசினோ
முன்பாக 110சிசி என்ஜினை பெற்று வந்த இந்த மாடல் தற்போது 125சிசி என்ஜினை பெற்றதாக புதிய ஃபேசினோ களமிறங்கியுள்ளது. மேலும் முந்தைய மாடலை விட சில ஸ்டைலிங் மாற்றங்களை களமிறங்கியுள்ளது.

125 FI என்ஜின் அதிகபட்சமாக 8.2 பி.எச்.பி பவர் மற்றும் 9 என்.எம் டார்க் திறனை வெளிப்படுத்துகின்றது. முந்தைய மாடலுடன் ஒப்பீடுகையில் 30 சதவீத கூடுதல் பவரை தருகிறது. யமஹா ஃபேசினோ 125 FI லிட்டருக்கு 58 கிமீ மைலேஜ் தரும் என கூறப்படுகிறது.
இந்த  ஃபேசினோ 125 பைக் மாடல் ரூ.69,250 முதல்  ரூ.72,750 வரையில் வெவ்வேறு வசதிகளுக்கேற்ப விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ்
ஹீரோ மோட்டார் நிறுவனத்தின் மேஸ்ட்ரோ எட்ஜ் மாடலில் 125 சிசி என்ஜின் FI தொழில்நுட்பத்துடன் கூடிய 125 சிசி என்ஜின் 9 பிஹெச்பி பவரினையும், 7000 ஆர்.பி.எம், 10.4 என்எம் டார்க்கினை 5500 ஆர்.பி.எம் திறனையும் வழங்குகின்றது. இந்த மாடல் சராசரியாக லிட்டருக்கு 58 கிமீ மைலேஜ் வழங்குகின்றது.

ஹீரோ மேஸ்ட்ரோ 125 வாகனம்  ரூ. 71,100 முதல் ரூ.73,800 வரையில் வெவ்வேறு வசதிகளுக்கேற்ப நிர்ணயம் செய்யப்படுகிறது.
 

Published by
மணிகண்டன்

Recent Posts

நிறைவடைந்த ஐபிஎல் மெகா ஏலம்! சென்னை அணி வீரர்களின் முழு லிஸ்ட் இதோ!

ஜெட்டா : ஐபிஎல் மெகா ஏலம் நேற்று மற்றும் இன்று என இரண்டு நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. அதில்,…

7 hours ago

தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை (26/11/2024) இங்கெல்லாம் மின்தடை!

கோவை : சின்னத்தடாகம், ஆனைகட்டி, நஞ்சுண்டாபுரம், பன்னிமடை சில பகுதிகள், பெரியதடாகம், பாப்பநாயக்கன்பாளையம். கட்டப்பட்டி, ஆர்.சி.புரம், ஜே.கிருஷ்ணாபுரம், நெகமம், வடசித்தூர்…

10 hours ago

கனமழையை எதிர்கொள்ள உதவி எண்களை அறிவித்த புதுச்சேரி ஆட்சியர்!

புதுச்சேரி : வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக புதுச்சேரியில் 25.11.2024 முதல் 29.11.2024 வரை கன…

10 hours ago

ரெட் அலர்ட் எதிரொலி: நாளை நாகை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

நாகை : தென் கிழக்கு வங்கக்கடலில் நிலைக் கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகைக்கு தென் கிழக்கே…

11 hours ago

ஈ சாலா கப் நம்தே? பெங்களூரு தேடிய ‘அடேங்கப்பா 11 பேர்’ இவர்களா?

பெங்களூர் : இது தாங்க டீம் என்கிற வகையில் இப்படி ஒரு டீமுக்காக தான் வெயிட் பண்ணிட்டு இருந்தோம் என…

12 hours ago

75 லட்சம் டூ 4.80 கோடி… தொக்காய் தூக்கிய மும்பை அணி! யார் இந்த அல்லா கசன்ஃபர்?

ஜெட்டா : ஐபிஎல் மெகா ஏலத்தின் 2-வது மற்றும் கடைசி நாளான இன்று ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில்,…

12 hours ago