உலக பல்கலை தடகள போட்டியில் டூட்டீ சந்த் தங்கம் வென்று சாதனை !
இத்தாலியில் நடைபெற்ற உலக பல்கலை தடகள சாம்பியன் ஷிப் மகளிர் 100 மீட்டர் ஓட்டப்பந்தய போட்டியில் இந்திய வீராங்கனை டூட்டீ சந்த் தங்க பதக்கம் வென்றார்.இந்த 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் டூட்டீ சந்த் 11.32 வினாடியில் இலக்கை கடந்து முதலிடத்தை பிடித்தார்.
சுவிட்சர்லாந்து வீராங்கனை டெல் போன்ட்டோ 11.33 வினாடியில் இலக்கை கடந்து இரண்டாம் இடம் பிடித்து வெள்ளி பதக்கம் வென்றார்.ஜெர்மனி வீராங்கனை லிசா க்வாயி 11.39 வினாடியில் இலக்கை கடந்து மூன்றாம் இடம் பிடித்து வென்றார்.
இந்நிலையில் உலக பல்கலை தடகள போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தார்.உலக அளவில் தடகள போட்டியில் தங்கம் வென்ற இரண்டாவது இந்திய வீராங்கனை என்ற பெருமையை பெற்றார்.
இதற்கு முன் 2018-ம் ஆண்டு உலக ஜூனியர் தடகள சாம்பியன் ஷிப் மகளிர் 400 மீட்டர் போட்டியில் ஹிமா தாஸ் தங்கம் வென்றார்.