இறுதி பந்தில் சிக்ஸர் அடித்த டோனி! வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 269 ரன்கள் இலக்கு
இன்று நடைபெறும் போட்டியில் இந்திய அணியும் ,வெஸ்ட் இண்டீஸ் அணியும் மோதி வருகிறது. இப்போட்டி மான்செஸ்டரில் உள்ள எமிரேட்ஸ் ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.இப்போட்டி டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது
இந்திய அணியின் தொடக்க வீரர்களாக கே.எல் ராகுல், ரோகித் சர்மா இருவரும் இறங்கினர் . ஆட்டம் தொடக்கத்திலிருந்து நிதானமாக விளையாடிய இருவரும் பொறுமையாக ரன்களை சேர்த்தனர். அந்நிலையில் 6 -வது ஓவரில் ரோகித் சர்மா 23 ரன்னில் வெளியேறினார்
பின்னர் களமிறங்கிய இந்திய அணியின் கேப்டன் கோலி , கே.எல் ராகுல் இருவரும் நிதானமாக விளையாடி அணியின் ரன்களை சேர்த்தனர். சிறப்பாக விளையாடி வந்த கே.எல் ராகுல் 48 ரன்னில் அவுட்டானார்.
அதன் பின்னர் களமிறங்கிய விஜய் சங்கர், கேதர் ஜாதவ் இருவரும் சொற்ப ரன்களில் வெளியேறினார். நிதானமாகவும் ,சிறப்பாக விளையாடி வந்த இந்திய அணியின் கேப்டன் கோலி 72 ரன்கள் குவித்தார்.
மத்தியில் இறங்கிய டோனி ,ஹார்திக் பாண்டிய இருவரும் சீராக விளையாடி ரன்களை சேர்ந்தனர்.இறுதியாக டோனி அரைசதம் எடுக்க, இந்திய அணி 50 ஓவர் முடிவில் 5 விக்கெட்டை இழந்து 268 ரன்கள் எடுத்தது. வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேமர் ரூஜ் 3 விக்கெட்டையும், ஜாக்சன் போல்டர் தலா2 விக்கெட்டும் வீழ்த்தினார்.
மேலும் வெஸ்ட் இண்டீஸ் அணி 269 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம்காண உள்ளது.