இன்று இரவு 7.10 மணிக்கு… தனுஷ் ரசிகர்களுக்கு தரமான அப்டேட்!
செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் புதிய திரைப் படத்திற்கான டைட்டில் லுக் இன்று இரவு 7.10 மணிக்கு அறிவிக்கப்படும் என செல்வராகவன் தெரிவித்துள்ளார்.
இயக்குனர் செல்வராகவன் மற்றும் தனுஷ் கூட்டணி ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த ஒரு கூட்டணியாக மாறிவிட்டது. இந்நிலையில் ஏற்கனவே தனுஷ் மற்றும் செல்வராகவன் கூட்டணியில் ஆயிரத்தில் ஒருவன் 2 படம் மற்றும் பெயரிடப்படாத இன்னொரு படமும் உருவாகி வருகிறது. இதில் ஆயிரத்தில் ஒருவன் 2 படத்தை ரிலீஸ் செய்வதற்கு காலதாமதமாகும் எனவும், 2024 ஆம் ஆண்டு தான் இந்தப்படம் ரிலீஸ் செய்யப்படும் எனவும் சமீபத்தில் செல்வராகவன் தெரிவித்திருந்தார். இந்நிலையில், இவர்களின் நான்காவது கூட்டணி படமாக உருவாகியுள்ள தனுஷ் செல்வராகவனின் புதிய படத்திற்கான படப்பிடிப்பு நேற்று சென்னையில் உள்ள கோகுலம் ஸ்டூடியோவில் தொடங்கியதாக செல்வராகவன் அறிவித்திருந்தார். இந்த படத்திற்கு கலைப்புலி எஸ் தாணு அவர்கள் தயாரிப்பதாகவும், யுவன் சங்கர் ராஜா இசை அமைப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
2021 ஆம் ஆண்டு தீபாவளிக்கு ரிலீஸ் செய்யப்படும் என படக்குழுவினர் திட்டமிடப்பட்டுள்ள இந்த படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் டீஸர் பொங்கல் தினத்தில் வெளியிட படக்குழு திட்டமிட்டு உள்ளதாகவும், அதற்காக தான் சென்னையில் உள்ள கோகுலம் ஸ்டூடியோவில் சமீபத்தில் படப்பிடிப்பு தொடங்கியதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் தற்போது தனுஷ் ரசிகர்களுக்காக செல்வராகவன் ஒரு அட்டகாசமான அப்டேட் ஒன்றை கொடுத்துள்ளார். அதாவது செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகக்கூடிய தனது S12 படத்தின் டைட்டில் லுக் நாளை இரவு 7.10 மணிக்கு அறிவிக்கப்படும் என செல்வராகவன் அவர்கள் நேற்று அறிவித்துள்ளார். இன்று இரவு 10 மணிக்கு அறிவிக்கப்பட உள்ள இந்த டைட்டில் அப்டேட்டுக்காக தனுஷ் ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். இதோ அந்த பதிவு,
நாளை 13.01.2021
மாலை 7.10 க்கு சந்திப்போம் !
Typo க்கு மன்னிக்கவும் நண்பா ! pic.twitter.com/g7T1yNEgv5— selvaraghavan (@selvaraghavan) January 12, 2021