தேர்தலுக்கு பின் முதல் முறையாக வெளியில் சென்ற பிரான்ஸ் அதிபர் மக்ரோனுக்கு தக்காளி வீச்சு.., வீடியோ
கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரான்சில் நடைபெற்ற தேர்தலில் 44 வயதான இமானுவேல் மக்ரோன் மீண்டும் பிரான்ஸ் அதிபராக 58 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இதனால், இரண்டாவது முறையாக பிரான்சில் அதிபராக முன்றாவது ஜனாதிபதி எனும் பெருமையை இவர் பெற்றுள்ளார்.
ஆனால், வருகிற ஜூன் மாதம் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் இம்மானுவேல் பெரும்பான்மையயை இழப்பதற்கான வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டது. இது தொடர்பாக எடுக்கப்பட்ட ஒரு கருத்துக்கணிப்பில் 63% வாக்காளர்கள் இமானுவேல் மக்ரோனை விரும்பவில்லை என கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில், தேர்தலில் வெற்றி பெற்ற பின்னதாக இன்று முதல்முறையாக வெளியில் சென்ற மைக்ரோனுக்கு மக்கள் தக்காளிகளை தூக்கி இருந்துள்ளனர். அப்பொழுது மக்ரோனின் பாதுகாப்பு காவலர்கள் அவரை சூழ்ந்துகொண்டுள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ,
Emmanuel Macron made his first appearance since his election, he received tomato from the French crowd. pic.twitter.com/s6AnNM75TI
— ????En el barrio de Cortes viven residentes (@VecBarrioCortes) April 27, 2022