ரசிகர்கள் இல்லாமல் ஒலிம்பிக் போட்டிகளை நடத்த விருப்பமில்லை.! – டோக்கியோ 2020 தலைவர் பேச்சு.!
பார்வையாளர்கள் இன்றி, ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதில் எனக்கு விருப்பமில்லை. என, டோக்கியோ 2020 தலைவர் யோஷிரோ மோரி கியோடோ தெரிவித்துள்ளார்.
இந்த வருடம் சரியாக இம்மாதம் ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கோலாகலமாக தொடங்கியிருக்கும். ஆனால், உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்று பரவலால் ஒலிம்பிக் போட்டிகள் தள்ளிவைக்கப்பட்டுள்ளன.
இது குறித்து, டோக்கியோ 2020 (ஜப்பான் நாட்டின் ஒலிம்பிக் போட்டி கமிட்டி) தலைவர் யோஷிரோ மோரி கியோடோ அண்மையில் ஒரு செய்தி சேனலுக்கு தெரிவிக்கையில், ‘ பார்வையாளர்கள் இன்றி, ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதில் எனக்கு விருப்பமில்லை.’ எனவும்,
கொரோனா தொற்று பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஒலிம்பிக் போட்டிகளை அடுத்த வருட கோடை விடுமுறை காலத்தில் நடத்த திட்டமிட்டுள்ளோம். அதற்கான வேலைகள் நடைபெற்று வருகின்றன. பார்வையாளர்களின் நலன் கருதி அவர்கள் இன்றி, போட்டிகளை நடத்த ஆலோசனை எழுந்துள்ளது. இதில் , ஜப்பான் நாட்டு முன்னாள் பிரதமர் மோரிக்கு கூட இதில் விருப்பமில்லை. ஆனாலும், அதனையும் ஒரு விருப்பமாக வைத்துள்ளோம்.’ என அவர் குறிப்பிட்டுள்ளார்.