அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பு.
நாசா நிலவிற்கு செல்வதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது. எதிர்காலத்தில் விண்வெளி வீரர்களை அனுப்புவதற்கும், அவர்களுக்கு தங்குமிடம் வழங்குவதற்கும் பல நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், 2024 ஆம் ஆண்டு நிலவுக்கு மனிதர்களை அனுப்ப நாசா தயாராகி வருகிறது. இந்த பயணத்தில் விண்வெளி வீரர்களை நிலவில் தங்க வைத்து ஆராய்ச்சி மேற்கொள்ள திட்டமிட்டிருக்கிற நிலையில், இந்த திட்டத்தில் நிலவில் முதல் பெண்ணை தரையிறக்க இருக்கும் நாசாவின் புது திட்டத்திற்கு ஆர்ட்டிமிஸ் என பெயரிடப்பட்டிருக்கிறது.
கடந்த நாட்களில், விண்வெளி பயணங்களில் விண்வெளி வீரர்களின் கழிவுகளை அப்புறப்படுத்துவதில் சந்தித்த சிக்கல்களுக்கு தீர்வு காண நாசா திட்டமிட்டுள்ள நிலையில், மைக்ரோ ஈர்ப்பு விசை மட்டுமின்றி எதிர்காலத்தில் சந்திர லேண்டர் விண்கலத்தில் நிலவின் ஈர்ப்பு விசை சக்தியிலும் பயன்படுத்தக் கூடிய கழிவறையை வடிவமைக்க நாசா அழைப்பு விடுத்திருக்கிறது.
இதை வடிவமைத்து அனுப்புபவர்களுக்கு முதல் பரிசாக இந்திய மதிப்பில் 15 லட்சம், இரண்டாம் பரிசு 7 லட்சத்து 50 ஆயிரம், மூன்றாவது பரிசு 3 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் ஜூனியர் பிரிவில் பங்கேற்கலாம்.
சென்னை : கடந்த சில நாட்களாக உச்சம் தொட்டு வந்த தங்கத்தின் விலை தற்போது மீண்டும் சற்று உயர்ந்துள்ளது. தொடர்ந்து…
கொழும்பு : இலங்கையில் நிலவிய மோசமான பொருளாதர சூழலை அடுத்து ஜனாதிபதி, பிரதமர் பதவி விலகிய நிலையில், நாட்டின் புதிய…
சென்னை : நடைபெற்ற இலங்கை புதிய நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் அதிபர் அனுரகுமார திஸாநாயக்க கூட்டணி…
சென்னை : ஆளும் திமுக அமைச்சரவையில் மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை அமைச்சராக பொறுப்பில் இருப்பவர் செந்தில் பாலாஜி. இவர்…
வெல்லிங்டன் : நியூஸிலாந்தில் 22 வயதான இளம் வயது பெண் எம்பி பார்லிமென்டில் வித்தியாசமான முறையில் மசோதாவை எதிர்த்து, தனது…
வாஷிங்டன் : சமூக வலைத்தளமான பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் ஆகியவை 'மெட்டா' நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகிறது. இவற்றை மார்க்…