அண்ணாமலை பேட்டி:
இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய பாஜக தலைவர் அண்ணாமலை, அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை என நான் ஒருபோதும் கூறவில்லை. கூட்டணியில் இருக்கிறோம் என்று அமித்ஷா கூறினாரே தவிர, கூட்டணியை உறுதி செய்யவில்லை. தேர்தலுக்கு 9 மாதம் உள்ள நிலையில் கூட்டணி குறித்து எதுவும் கூற இயலாது. கூட்டணி குறித்த இறுதி முடிவை பாஜக தேசிய தலைமை தான் எடுக்கும் என்று கூறினார்.
2.04.2023 3:25 PM
ஆன்லைன் ரம்மியால் மற்றுமொரு சம்பவம்:
தூத்துக்குடியில் ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்த தம்பியை அண்ணன் இரும்பு கம்பி மூலம் அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2.04.2023 3:00 PM
பல் பிடுங்கிய விவகாரம்:
பற்களை பிடுங்கிய விவகாரத்தில் விக்கிரமசிங்கபுரம் தனிப்பிரிவு காவலர் போகன், கல்லிடைகுறிச்சி தனிப்பிரிவு காவலர் ராஜ்குமார் ஆகியோர் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன் உத்தரவிட்டுள்ளார்.
2.04.2023 2:20 PM
அதிமுக – பாஜக கூட்டணி:
அதிமுக – பாஜக இடையிலான கூட்டணி வலுவாக உள்ளது என தெரிவித்தார். அதிமுக – பாஜக கூட்டணியில் எந்த பிரச்சினையுமில்லை, கூட்டணி தொடர்கிறது எனவும், கூட்டணி குறித்து நிர்வாகிகள் மத்தியில் அண்ணாமலை பேசியதில் எந்த சர்ச்சையும் இல்லை என்று விளக்கமளித்துள்ளார்.
2.04.2023 1:10 PM
நாளை மேல்முறையீடு – ராகுல்காந்தி :
பிரதமர் மோடி குறித்து காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி அவதூறாக பேசியதை தொடர்ந்து குஜராத் மாநிலம் சூரத் நீதிமன்றம் அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. இதை தொடர்ந்து அவரின் வயநாடு மக்களவை உறுப்பினர் பதவியும் பறிபோனது. எனவே அவர் இந்த தீர்ப்பு தொடர்பாக குஜராத் மாநிலம் சூரத் அமர்வு நீதிமன்றத்தில் நாளை மேல்முறையீடு செய்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
2.04.2023 1:00 PM
டெல்லி : விண்வெளியில் இரண்டு செயற்கை கோள்களை இணைக்கும் செயல்முறையாக பார்க்கப்படும் ஸ்பேஸ் டாக்கிங் செயல்முறைக்காக ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ…
கடலூர் : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கடலூரில் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில் தந்தை பெரியார் பற்றி பல்வேறு…
நியூ யார்க் : 2016 அமெரிக்க தேர்தல் சமயத்தில் நடிகைக்கு டொனால்ட் டிரம்ப் பணம் கொடுத்ததாகவும், அதனை தனது நிதி…
ஈரோடு : வரும் பிப்ரவரி 5ஆம் தேதியன்று டெல்லி சட்டசபை தேர்தலும், உ.பி மாநிலத்தில் ஒரு தொகுதி மற்றும் ஈரோடு…
சென்னை: நடிகர் சூர்யாவின் 44வது படமான ரெட்ரோ படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்துக்கு 'ரெட்ரோ' என…
கேரளா: மலையாள நடிகை ஹனிரோஸ் அளித்த பாலியல் புகாரில், பிரபல தொழிலதிபர் பாபி செம்மனூர் மீது வழக்குப்பதிவு செய்த எர்ணாகுளம்…