பள்ளிகளுக்கு கூடுதல் விடுமுறை? இன்று புதிய அறிவிப்பை வெளியிடும் அன்பில் மகேஷ்…
வெயில் பாதிப்பால் பள்ளிகள் திறப்பு தள்ளிப் போகிறதா? என்று அமைச்சர் அன்பில் மகேஸ் இன்று அறிவிக்கவுள்ளார்.
தமிழ்நாட்டில் 6-12 வரை ஜூன் 1ம் தேதியும், 1-5 வகுப்பு வரை ஜூன் 5ம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படுவதாக முன்னர் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், ஒரு பக்கம் 1-12ம் வகுப்பு வரை பள்ளிகள் ஜூன் 7ம் தேதி திறக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால், வெயிலின் தாக்கம் இன்னும் குறையவில்லை என்பதால், தற்போது உள்ள விடுமுறையை ஒருவாரம் நீட்டிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. தற்போது, அது குறித்த ஆலோசித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று வெளியிடவுள்ளார்.