வரலாற்றில் இன்று (10.12.2019) : சர்வதேச மனித உரிமைகள் தினம்!

Default Image

1948 ஆம் ஆண்டு டிசம்பர் 10 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் அமைப்பானது இந்த நாளில் உலக மக்கள் அனைவருக்கும் வாழ்வதற்கான உரிமை குறித்த பிரகடனத்தை அமல்படுத்தியது. அந்த நாளை குறிக்கும் வகையில் தான் ஆண்டு தோறும் டிசம்பர் 10ஆம் தேதி மனித உரிமைகள் நாளாக கொண்டாடப்படுகிறது. 1948 டிசம்பர் 10 இதனை பிரகடனப்படுத்தினாலும், சில தன்னார்வ அமைப்புகள் கூறியதன் பெயரில் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க 1950ஆம் ஆண்டு முதல் ஐநா-வானது உலக மக்கள் அனைவருக்கும் வாழ்வுரிமை பிரகடனப்படுத்திய டிசம்பர் 10ஆம் தேதியை மனித உரிமை நாளாக கொண்டாடும்படி வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து மனித உரிமைகள் நாள் டிசம்பர் 10இல் கடைபிடிக்கப்படுகிறது. இந்த பிரகடனத்தின் நோக்கம் என்னவென்றால் இந்த உலகத்தில் உள்ள ஒவ்வொரு மனிதனும் சுதந்திரமானவர்களே, உரிமை, கண்ணியம் என அனைத்திலும் சமமானவர்களே! அவர்களை, இனம், நிறம், பால், இனம், மொழி, மதம், அரசியல், சமுதாய தோன்றல், சொத்து, பிறப்பு என எதிலும் பாகுபாடு பார்க்கக்கூடாது. அனைவரும் சமமானவர்கள்.

இதன் அவசியத்தை உணர்த்தவே இந்த சம்பவம் மனித உரிமைகள் நாளாக கொண்டாடப்படுகிறது. இந்த மனித உரிமைகள் நாளில் தன்னார்வ அமைப்புகள்  பலவித முக்கிய நிகழ்வுகளை மேற்கொள்கின்றன.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live - 06 03 2025
IND VS NZ CT 2025
mookuthi amman 2
sunil gavaskar rohit sharma
Actor Abhinay
gold price
Tamilisai Soundararajan Selvaperunthagai