இன்றைய (31.5.2021) நாளின் ராசி பலன்கள்..!
மேஷம்: கடின உழைப்பு மற்றும் உறுதி மூலம் நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள். நீங்கள் எந்தச் செயல் செய்தாலும் மகிழ்ச்சியாக உற்சாகமாக செய்யுங்கள்.
ரிஷபம்: .உங்கள் செயல்திறனை மேம்படுத்துங்கள். இன்று வெற்றி கிடைக்கும் நாள். உங்களை முன்னேற்றிக்கொள்ளலாம்.பணி சம்பந்தமான பயணம் காணப்படுகின்றது.
மிதுனம்: இன்று எதிர்பாராத நன்மை கிடைக்க வாய்ப்புள்ளது. என்றாலும் இன்று முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டாம். இன்று அதிகப் பணிகள் காணப்படும். உங்கள் பணிகளை மேற்கொள்ளும் போது பொறுமை அவசியம்.
கடகம் : இன்று பெரும்பாலும் உங்களுக்கு சாதகமான நாள். இன்று நல்ல நண்பர்கள் மற்றும் உறவுகளை ஏற்படுத்திக் கொள்ள உகந்த நாள். பொது நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வதன் மூலம் மகிழ்ச்சியும் திருப்தியும் கிடைக்கும்.
சிம்மம்: முயற்சியின் மூலம் வெற்றி கிடைக்கும் நாள். பயணம் மூலம் வெற்றி காண்பதற்கு வாய்ப்புள்ள நாள். பணியிடச் சூழல் திருப்திகரமாக இருக்கும். உங்கள் பணிகளை எளிதாக மேற்கொள்வீர்கள்.
கன்னி: இன்று உங்களுக்கு நோக்கம் நிறைவேறும் வகையில் பயனுள்ள முடிவுகளை எடுக்கும் நாள். இன்று நீங்கள் நற்பலன்களை எதிர்பார்க்கலாம். உங்கள் பணியில் சாதகமான பலன்கள் கிடைக்கும்.
துலாம்: இன்று துடிப்பான நாள். உங்கள் தேவைகளை பூர்த்தி செய்துகொள்வதில் இன்று நீங்கள் மகிழ்ச்சியும் திருப்தியும் அடைவீர்கள். பணி சம்பந்தமான பயணம் காணப்படுகின்றது. பணியில் உங்கள் திறமை பிரகாசிக்கும்.
விருச்சிகம்: இன்று உங்களுக்கு சாதகமான நாள். உங்கள் சுய வளர்ச்சிக்கு இந்த நாளை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். உங்கள் நலனுக்காக இன்று முக்கிய முடிவுகளை எடுக்கலாம்.
தனுசு: இன்று நீங்கள் பொறுமையை வளர்த்துக் கொள்ள வேண்டியது அவசியம். உங்கள் செயல்களை செய்யுங்கள். ஆனால் உடனடி பலனை எதிர்பார்க்காதீர்கள். இன்று பணிச்சுமை அதிகமாக இருக்க வாய்ப்புள்ளது.
மகரம்: இன்று சமநிலையான நாள். நல்லுறவையும் நல்ல புரிந்துணர்வையும் பராமரிக்க இந்த நாளை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். தொழில் செய்பவர்களுக்கு இன்று சிறப்பான நாள்.
கும்பம்: முக்கிய முடிவுகளை வேறொரு நாளைக்கு தள்ளிப்போடுவது சிறந்தது. சுப காரியங்கள் நடப்பதும் தாமதம் ஆகும். இன்று அதிகப் பணிகள் காணப்படும். உங்கள் பணியில் பிரகாசிக்க நீங்கள் நம்பிக்கையுடன் செயல் பட வேண்டும்.
மீனம்: உங்கள் இலக்குகளை அடைவதற்கு நீங்கள் மிகுந்த முயற்சி எடுக்க வேண்டும். பணி மாற்றம் அல்லது இட மாற்றத்திற்கான வாய்ப்பு உள்ளது. நீங்கள் முடிவுகள் எடுப்பதை கடினமாக உணர்வீர்கள்.