இன்றைய (30.01.2021) நாளின் ராசிபலன்கள்…!

ரிஷபம்
இன்று வெற்றியை காண பொறுமையாக செயல்பட வேண்டும். செய்யும் செயலில் உறுதி இருந்தால் வெற்றி நிச்சயம். பதட்டமாக இருப்பதாக உணர்வீர்கள்.
மேஷம்
இன்று வெற்றி பெற தொடர் முயற்சி எடுக்கவேண்டும். பதட்டத்தை கட்டுப்படுத்துங்கள். ஆன்மிக ஈடுபாடுகள் உங்களை சுறுசுறுப்பாக வைக்கும்.
மிதுனம்
இன்றைய நாளில் குடும்பத்திற்காக பணம் செலவு செய்வீர்கள். இது உங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும். பணியில் வெற்றி கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளது.
கடகம்
இன்றைய நாள் மகிழ்ச்சிகரமான நாளாக அமையாது. நீங்கள் அதிக முயற்சி எடுக்க வேண்டும். இன்று தெளிவு இருக்காது. நீங்கள் உங்கள் துணையுடன் மகிழ்ச்சியாக இருக்க அனுசரித்து நடந்து கொள்ளவேண்டும்.
சிம்மம்
இன்று ஆன்மிக செயல்பாடுகளில் ஈடுபடுவதன் மூலம் ஆறுதல் பெறுவீர்கள். பிரார்த்தனை மற்றும் தியான பயிற்சி ஆறுதல் அளிக்கும். இன்று வரவு செலவு இரண்டும் காணப்படும்.
கன்னி
இன்று பொறுமையை வளர்த்துக் கொள்ள வேண்டும். தைரியத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். உங்கள் துணையுடன் தேவையற்ற மோதல்கள் காணப்படும்.
துலாம்
இன்று வெற்றிக்கு உகந்த நாள். விரைவாக செயலாற்ற உங்களிடம் உறுதியும் தைரியமும் காணப்படும்.
விருச்சிகம்
இன்று சிறப்பான நாளாக இருக்கும். நீங்கள் மிகுந்த தன்னம்பிக்கையுடன் உங்கள் செயல்களைச் செய்வீர்கள். உங்கள் மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள்.
தனுசு
இன்று சுமாரான பலன்கள் கிடைக்கும் நாள். நீங்கள் அமைதியாகவும் பொறுமையாகவும் செயல்படவேண்டும். வரவை விட செலவு அதிகமாக இருக்கும்.
மகரம்
இன்று செயல்கள் உங்கள் விருப்பம் போல நடக்காது. நேர்மறை எண்ணம் கொண்டு செயல்படுவது நல்லது. இன்று ஆரோக்கியம் சுமாராக காணப்படும்.
கும்பம்
இன்று சாதகமான நாளாக அமையும். உங்கள் உடன்பிறந்தவர்களின் ஆதரவு கிடைக்கும். உங்கள் துணையுடன் மறக்க முடியாத நாளாக இருக்கும்.
மீனம்
இன்று வெற்றி கிடைக்கும் நாள். உங்கள் முயற்சி நல்ல பலன்களை அளிக்கும். பயணங்களுக்கான வாய்ப்புள்ளது.