இன்றைய (27.5.2021) நாளின் ராசி பலன்கள்..!

Default Image

மேஷம்: உங்கள் மனதில் உணர்ச்சிப்பூர்வமான எண்ணங்கள் ஓடும்.உங்களிடம் காணப்படும் பதட்டம் உங்கள் பேச்சில் வெளிப்படும். பிரார்த்தனை மற்றும் வழிபாடு மேற்கொள்வதன் மூலம் உங்கள் பதட்டத்தை குறைக்கலாம்.

ரிஷபம்: இன்று உங்களுக்கு சாதகமான நாளாக இருக்கும். உங்களின் திறமை மூலம் இன்று முன்னேற்றகரமான பலன்கள் காண்பீர்கள். நீண்ட கால திட்டம் அமைக்க இந்த நாளை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

மிதுனம்: இன்று முன்னேற்றகரமான நாளாக இருக்கும். உங்களிடம் காணப்படும் ஆற்றல் மற்றும் உற்சாகம் காரணமாக சுய முனேற்றப் பாதையில் செல்வீர்கள். இன்று அனைத்துவிதத்திலும் சிறப்பான நாள்.

கடகம் : இன்று சிறிது மந்தமாக காணப்படுவீர்கள். எனவே அதனை மாற்றி துடிப்புடன் செயல்பட வேண்டும். நேர்மறையான கண்ணோட்டம் கொள்ளுங்கள்.

சிம்மம்: உங்கள் தவறுகளை நீங்கள் திருத்திக்கொள்ள வேண்டும். உங்கள் செயல்களில் கட்டுப்பாடு வேண்டும்.உங்கள் செயல்களை முறைப்படுத்தி ஆற்றுவதன் மூலம் இழப்பு ஏற்படாமல் இருக்கும்.

கன்னி: இன்று துடிப்பான முன்னேற்றகரமான நாளாக இருக்கும். நீங்கள் உங்களை முன்னேற்றிக் கொள்வதில் முனைவீர்கள். இன்று உங்களுக்கென சிறப்பம்சத்தை உருவாக்குவீர்கள்.

துலாம்: இன்று சோதனையான நாளாக இருக்கும். எதைப்பற்றியும் கவலையின்றி அமைதியாக இருக்க வேண்டியது அவசியம். பணியிடத்தில் ஆதாயம் கிடைப்பது கடினம். சிறிய செயல்களை முடிக்க கடுமையான முயற்சி தேவைப்படும்.

விருச்சிகம்: ஆன்மீக விழிப்புணர்வும் ஈடுபாடும் மகிழ்ச்சி அளிக்கும். இன்று அனுபவத்தின் மூலம் பாடம் கற்க நேரலாம்.பணி வளர்ச்சி சராசரியைவிட சற்று கூடுதலாக இருக்கும்.

தனுசு: முக்கியமான முடிவுகளை வேறு நாளைக்கு தள்ளிப் போடுங்கள். இன்று தைரியம் குறைந்து காணப்படும். உங்கள் உணர்ச்சியுடன் போராடி உங்கள் சுய முன்னேற்றத்திற்கு முயல வேண்டும்.

மகரம்:இன்று மகிழ்ச்சியான மனநிலையில் இருப்பீர்கள். உங்கள் மகிழ்ச்சி உங்கள் செயல்களில் வெளிப்படும் தியானம் மேற்கொள்வதன் மூலம் இன்னும் மகிழ்ச்சியாக இருக்க இயலும்.

கும்பம்: இன்றைய நாள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். முக்கிய முடிவுகள் இன்று உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். பணியிடத்தில் முன்னேற்றம் சிறப்பாக இருக்கும். எந்தச் சவால்களையும் நீங்கள் எளிதில் சமாளிப்பீர்கள்.

மீனம்: இன்று சில சௌகரியங்களை விட்டுக்கொடுக்க வேண்டியிருக்கும். மகிழ்ச்சி குறைந்து காணப்படும். யதார்த்தமான அணுகுமுறை மேற்கொள்வது சிறந்தது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்