இன்றைய நாளின் (21.11.2021) ராசி பலன்கள்..!

மேஷம் : தேவையில்லாத உணர்வுகளை நீங்கள் தவிர்க்க வேண்டும். உங்களது உத்தியோக வேலையில் சற்று பணிச்சுமை அதிகமாக தெரியும். உங்கள் மனைவியிடம் அனுசரித்து பேசுங்கள். பணவரவு குறைந்து காணப்படும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
ரிஷபம் : இன்றைய தினத்தில் பொறுமையும் உறுதியும் அவசியம். உத்தியோக பணிகளில் சூழ்நிலையை கவனித்து செயல்படுங்கள். குடும்பத்தில் ஒற்றுமையை ஏற்படுத்த முயல்வீர்கள். பணம் இன்று சற்று செலவாக நேரிடலாம். பதட்டத்தால் தலைவலி ஏற்படும்.
மிதுனம் : உங்களின் முயற்சியில் நீங்கள் வெற்றி பெறவில்லை என்று மனம் தளர வேண்டாம்.திட்டமிட்டு செயல்படுவது அவசியம். இன்று காதலுக்கு உகந்த நாள் இல்லை. தேவையில்லாத செலவினங்கள் ஏற்படலாம். ஆரோக்கியம் மிதமாக இருக்கும்.
கடகம் : இன்று நீங்கள் அதிக முயற்சிகள் செய்ய வேண்டும். இன்று உங்களுக்கு கொடுக்கப்பட்ட உத்தியோக பணிகள் அதிகமாக ஏற்படும். இன்று பணவரவு அதிகமாக இருக்காது. உடல் ஆரோக்கியம் மிதமாக இருக்கும்.
சிம்மம் : இன்று ஆற்றல் மிகுந்து முயற்சிகள் செய்தாலும் வெற்றி கிடைக்காவிட்டால் மனம் தளர வேண்டாம். உங்களது உத்தியோக வேலைகளில் ஏற்ற இறக்கங்கள் காணப்படும். பணவரவு சற்று குறைவாக இருக்கும். தலைவலி அல்லது பல்வலி தொடர்பான பிரச்சனை ஏற்படலாம்.
கன்னி : இன்று சில தடைகளுக்கு பிறகு நற்பலன்கள் கிடைக்கும். வேலைகளில் பொறுமையை கடைபிடியுங்கள். குடும்பத்தில் சற்று மகிழ்ச்சி குறைந்து காணப்படும். இன்றைய நாளில் வரவும் செலவும் கலந்து உங்களுக்கு அமையும். ஆரோக்கியம் மிதமாக காணப்படும்.
துலாம் : இன்று உங்களுக்கு பொறுப்புகள் அதிகமாக இருக்கும். முக்கிய முடிவுகளை நாளைக்கு தள்ளி வையுங்கள். உத்தியோக வேலை இன்று சிறப்பாக அமையாது. பணவரவு ஏற்ற இறக்கத்துடன் இருக்கும். பண பரிவர்த்தனையின் போது சற்று கூடுதல் கவனம் தேவை. உணவு முறையில் கவனம் செலுத்த வேண்டும்.
விருச்சிகம் : இன்று உங்களுக்கு பொறுமை மிகவும் அவசியம். பணியில் சில இறுக்கங்கள் ஏற்பட்டாலும் திறமை மற்றும் உறுதியால் வெற்றி பெறலாம். இன்று குடும்பத்தார்களிடம் பொறுத்து செல்வது நல்லது. பணவரவு குறைவாக ஏற்படும்.தோல் சம்மந்தப்பட்ட பிரச்சனை ஏற்படலாம்.
தனுசு : இன்று நன்மை மற்றும் தீமை இரண்டும் கலந்து அமைவதால் முக்கிய முடிவுகளை நாளைக்கு தள்ளி வையுங்கள். உத்தியோக வேலை காரணமாக பயணங்கள் ஏற்படும். பணவரவுகள் சற்று குறைவாகவே இன்று ஏற்படும். உடல் ஆரோக்கியம் மிதமாக இருக்கும்.
மகரம் : இன்று திட்டமிட்டு செயலாற்றுவது அவசியம். உத்தியோக பணிகளில் தவறுகள் ஏற்படாமல் இருக்க அதிக கவனத்துடன் செயல்படுங்கள். குடும்பத்தில் சில சச்சரவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. வரவிற்கேற்ற செலவு என்ற விதத்தில் இன்று அமையும். உங்கள் துணையின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்காத காரணத்தால் செலவு செய்ய நேரிடும்.
கும்பம் : இன்று சுமாரான நாளாகவே அமையும். பொறுப்புகள் அதிகரிக்க நேரிடும். நேர்மறை எண்ணங்களோடு செயல்படுங்கள். எதிர்காலத்தை நினைத்து அதிகம் யோசித்து குழப்பம் கொள்ள வேண்டாம். பங்கு வர்த்தனையில் பணவரவுகள் ஏற்படும். செரிமான கோளாறு ஏற்பட வாய்ப்பு உண்டு.
மீனம் : இன்று நீங்கள் கவலையோடு காணப்படுவீர்கள். உத்தியோக வேலைகளில் உங்களுக்கு கீழ் பணிபுரியும் நபர்களுடன் பிரச்சனை ஏற்பட வாய்ப்பு உண்டு. குடும்பத்தில் மகிழ்ச்சி சற்று குறைவாக இருக்கும். பணவரவு ஏற்ற இறக்கத்துடன் இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும்.