இன்றைய (19.5.2021) நாளின் ராசி பலன்கள்..!

Published by
பால முருகன்

மேஷம்: இன்று முக்கியமான முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும். சில விஷயங்களில் விட்டுக்கொடுத்து செல்வது கூட உங்களுக்கு மன உளைச்சலைத் தரும்.இன்று பணிகள் கடினமாக காணப்படும்.

ரிஷபம்: இன்று உங்கள் வளர்ச்சிக்கு உகந்த நாள். மகிழ்ச்சியான புது அனுபவங்கள் உங்களுக்கு காத்திருக்கின்றது. பணியில் காணப்படும் வளர்ச்சி உங்களை மகிழ்ச்சியாகவும் திருப்தியாகவும் வைத்திருக்கும்.

மிதுனம்:ஆன்மீகம் சம்பந்தப்பட்ட பயணங்களுக்கு இன்றைய நாள் சிறந்தது. உங்கள் வளர்ச்சி குறித்து கவலைப்படுவீர்கள். பொறுமையாக இருப்பதன் மூலம் நீங்கள் நினைத்தது நடக்கும்.

கடகம் : இன்று உணர்ச்சிவசப்படுவீர்கள். பாதுகாப்பற்ற உணர்வு காணப்படும். இன்றைய நாள் மகிழ்ச்சிகரமானதாக இருக்காது. உங்கள் வளர்ச்சி பற்றி கவலைப்படுவீர்கள்.

சிம்மம்: நீங்கள் கடினமாக உழைத்து பலனை எதிர்பார்க்க வேண்டும். பாடல்கள் கேட்பது திரைப்படம் பார்ப்பது போன்றவற்றின் மூலம் அமைதியடையுங்கள்.

கன்னி: இன்று நீங்கள் புதியதொரு வளர்ச்சியை நோக்கி முன்னேறுவீர்கள். சிறப்பாக திட்டமிடுதல் மற்றும் தொழில் சார்ந்த அணுகுமுறை மூலம் வெற்றி காணலாம்.

துலாம்: இன்று பயணங்கள் காணப்படுகின்றன. யதார்த்தமான அணுகுமுறை மேற்கொள்வது நல்லது. இசை விழாக்களில் பங்கு கொள்வது ஆறுதலைத் தரும்.

விருச்சிகம்: உங்கள் உணர்வுகளையும் உணர்ச்சிகளையும் கண்காணிக்க வேண்டும். நேர்மறையான அணுகுமுறை வெற்றியை அளிக்கும். இன்று பணிச்சுமை அதிகமாக காணப்படும்.

தனுசு: இன்று சில சவால்களை சந்திக்க நேரும். என்றாலும் அதுவும் உங்களுக்கு நல்லது. இன்று பணிகளைக் கையாளும்போது கவனம் தேவை. இன்று பணிச்சுமை காணப்படும்.

மகரம்: உங்கள் முயற்சியும் தன்னம்பிக்கையும் வெற்றியையும் மகிழ்ச்சியையும் அளிக்கும். இன்று அதிர்ஷ்டம் உங்களைப் பார்த்து புன்னகை பூக்கும். உங்கள் முயற்சிகள் உங்கள் மேலதிகாரிகளால் பாராட்டப்படும்.

கும்பம்: இன்றைய நாளை உங்கள் சுய வளர்ச்சிக்கு பயன்படுத்தலாம். நேர்மையான முயற்சிகளால் விரும்பும் பலன்களை அடையலாம்.பணியிடத்தில் நல்ல வளர்ச்சி காணப்படும்.

மீனம்: இன்று முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும். அமைதியுடனும் தன்னம்பிக்கையுடனும் இருங்கள். பணியிடத்தில் வளர்ச்சி குறைந்து காணப்படும். பணிகளைக் கையாளும்போது கவனம் தேவை.

Published by
பால முருகன்

Recent Posts

சென்னை, காஞ்சிபுரம் 10 மணி வரை இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

சென்னை, காஞ்சிபுரம் 10 மணி வரை இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

சென்னை : தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திர- வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…

3 hours ago

தமிழகத்தில் வியாழன் கிழமை (26/12/2024) இங்கெல்லாம் மின்தடை!

கோவை : கலங்கல், பீடம்பள்ளி, பட்டணம், பாப்பம்பட்டி, அக்கநாயக்கன்பாளையம், பட்டணம்புதூர், பாப்பம்பட்டிப்பிரிவு, கண்ணம்பாளையம், நடுப்பாளையம் (ஒரு மண்டலம்), சின்ன குயிலி,…

3 hours ago

வந்தாச்சு விடாமுயற்சி அப்டேட்! முதல் பாடல் இந்த தேதியில் தான் வெளியீடு!

சென்னை : விடாமுயற்சி படத்திற்கான அப்டேட் எப்போது வெளியாகும் என்று தான் அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி மற்ற சில நடிகர்களின் ரசிகர்களும்…

3 hours ago

நான் தான் நம்பர் 1! டெஸ்ட் தரவரிசையில் அஸ்வின் சாதனையை சமன் செய்த பும்ரா!

சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஐசிசி தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்து அசதியுள்ள…

4 hours ago

பாலியல் வன்கொடுமை – த.வெ.க தலைவர் விஜய் கடும் கண்டனம்!

சென்னை : மாவட்டத்தில் கிண்டி பகுதியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வந்த மாணவி ஒருவர் இரண்டு பேரால் பாலியல் வன்கொடுமை…

4 hours ago

பாலியல் வன்கொடுமை- யார் இந்த ஞானசேகரன்? விசாரணையில் வந்த பகீர் தகவல்!

சென்னை : கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வரும் ஒரு மாணவனும், மாணவியும் பல்கலைக்கழக வளாகத்தில் ஒன்றாக அமர்ந்து பேசிகொண்டிருந்த…

5 hours ago