மேஷம்: இன்று வளர்ச்சிக்கு உகந்த நாள். உங்கள் திறமைகளை எளிதாக வெளிப்படுத்துவீர்கள். உங்கள் சக பணியாளர்களிடம் நல்ல விஷயங்களை பகிர்ந்து கொள்வீர்கள். இன்று போதுமான செழிப்பு காணப்படும்.
ரிஷபம்: உங்கள் பேச்சின் மூலம் சாதனை படைப்பீர்கள். அதே சமயத்தில் விஷயங்களை எளிதாக எடுத்துக் கொள்வது மிகவும் அவசியம். புதிய வேலை கிடைப்பதற்கான சாதகமான வாய்ப்புகள் காணப்படுகின்றன.
மிதுனம்: உங்கள் செயல்களை புத்திசாலித்தனத்துடன் செய்ய வேண்டும். இன்று நீங்கள் தவறு செய்ய வாய்ப்பு உள்ளது. பணியில் மும்மரமாக இருப்பீர்கள். இது உங்கள் துணையுடன் நல்லுறவை வளர்க்க உதவும்.
கடகம்:இன்று வளர்ச்சி காண்பதில் சற்று சிரமம் காணப்படும். ஆழ்ந்த தூக்கத்திற்கு வாய்ப்பில்லை. பணியில் தவறுகள் நேர்ந்து அதனால் உயர் அதிகாரிகளிடம் கெட்ட பெயர் ஏற்படலாம். பணத்தை புத்திசாலித்தனமாக செலவு செய்ய நீங்கள் திட்டமிடவேண்டும்.
சிம்மம்: இன்று தன்னம்பிக்கை குறைந்து காணப்படும். அதன் காரணமாக பொறுமை இழந்து காணப்படுவீர்கள். அதிர்ஷ்டம் குறைந்து காணப்படுவதால் கடின உழைப்பின் மூலம் மட்டுமே பணம் சம்பாதிக்க முடியும்.
கன்னி: கடுமையான பணிகளைக் கூட இன்று நீங்கள் எளிதாக முடிப்பீர்கள். உங்கள் தனித்தன்மையை வெளிக் கொணர்வீர்கள். மகிழ்ச்சியான தருணங்களை உங்கள் துணையுடன் இன்று பகிர்ந்து கொள்வீர்கள். உங்கள் துணையுடன் இனிமையாக நேரத்தை கழிப்பீர்கள்.
துலாம்:இன்றைய தினத்தை சரியான முறையில் பயன்படுத்த வழிகளும் உபாயங்களும் உங்களிடம் இருக்கும். தேவையற்ற செலவுகளுக்காக பணத்தை செலவு செய்ய நேரிடும். இது உங்களுக்கு கவலையை அளிக்கும்.
விருச்சிகம்: இன்று உங்களிடம் தொடர் முயற்சிகள் காணப்படும். உங்களிடம் காணப்படும் மனஉறுதி காரணமாக இன்றைய நாளின் பலன்கள் உங்களுக்கு அனுகூலமாக இருக்கும். உங்கள் துணையுடன் உங்கள் உணர்வுகளை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைவீர்கள்.
தனுசு: உங்கள் பணிகளை விரைந்து செய்ய இயலாது. உங்கள் செயல்களில் சிறிது மந்த நிலை காணப்படும். உங்கள் தைரியக்குறைவு காரணமாக உங்கள் வளர்ச்சியில் மந்தத்தன்மை காணப்படும்.உங்கள் சேமிப்பு அதிகரிப்பதில் தடைகள் காணப்படும்.
மகரம்: இன்றைய தினம் உயிர்ப்பற்ற நாளாக இருக்கும் முக்கியமான முடிவுகளை வேறொரு நாளுக்கு தள்ளிப் போடுங்கள். நீங்கள் எதிர்பார்த்த் அளவிற்கு நிதி வளர்ச்சி காணப்படாது. செலவுகள் அதிகமாக காணப்படும். இது உங்களுக்கு கவலையை அளிக்கும்.
கும்பம்: உங்கள் முன்னேற்றம் குறித்து கவலைகள் காணப்படும். கவனமாக இருப்பது நல்லது. விஷயங்களை இலேசாக எடுத்துக் கொள்ளுங்கள். உங்கள் பணியில் தவறுகள் ஏற்படும். அதன் காரணமாக மேலதிகாரிகளின் அதிருப்திக்கு ஆளாவீர்கள்.
மீனம்: இன்றைய நாள் செழிப்பான பலன்கள் கிடைப்பதற்கு சாதகமான நாள் அல்ல. தடைகள் நிறைந்து காணப்படும். அதனால் உங்கள் சௌகரியங்களை இழக்க நேரும். நேர்மறை எண்ணத்துடன் கவனமாக பணிகளைக் கையாளுங்கள்.
மதுரை : நேற்று மதுரை கே.கே நகர் பகுதியில் உள்ள ஸ்ரீ கிண்டர் கார்டன் எனும் தனியார் மழலையர் பள்ளியில்…
சென்னை : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து நேற்று டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் முப்படை அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம்…
இஸ்லாமாபாத் : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர், பலர் காயமடைந்தனர். அதைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிராக, இந்தியா…
காஷ்மீர் : ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சியின் தேசியத் தலைவரும், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வருமான ஃபரூக் அப்துல்லா,…
சென்னை : ஐபிஎல்லின் இன்றைய லீக் போட்டியில் சென்னை, பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இரவு 7…
விசாகப்பட்டினம் : ஆந்திராவின் விசாகப்பட்டினம் அருகே உள்ள சிம்மாச்சலம் ஸ்ரீ நரசிம்ம சுவாமி கோயில் சந்தன உற்சவ விழாவின்போது சுவர்…