இன்றைய (12.04.2021) நாளின் ராசி பலன்கள்..!
மேஷம்: உங்கள் மனதிலுள்ள எதிர்மறை எண்ணங்களை நீக்கி விடுங்கள். உறவில் மகிழ்ச்சி நிலவ உங்கள் உரையாடல்களில் கவனம் செலுத்த வேண்டும். பண வரவு குறைவாக இருக்கும். பணத்தை சாதுர்யமாக கையாள வேண்டும்.
ரிஷபம்: இன்று உங்கள் விருப்பங்கள் நிறவேறும். அதனால் மனதில் மகிழ்ச்சி நிலவும். உங்கள் பணிகளை முடிக்க திருப்தியான நேரம் உங்கள் கையில் உள்ளது.எனவே அதில் கவனம் தேவை. உறவில் நல்லிணக்கம் பராமரிக்க இது மிகவும் அவசியம்.
மிதுனம்: இன்று நற்பலன்கள் கிடைக்கும். நீங்கள் அமைதியாகவும் சௌகரியமாகவும் உணரலாம்.இதனால் நற்பெயர் சம்பாதிக்கலாம்.இன்று காதல் விவகாரங்கள் சிறந்த பலனை அளிக்கும்.
கடகம்: இன்று உங்களிடம் கவனம் அதிகமாக காணப்படும்.அதனை நீங்கள் நன்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் பயணம் மேற்கொள்வீர்கள். இதனால் பணியில் மும்மரமாக இருப்பீர்கள். உங்கள் பணிகளை திட்டமிட்டு முறையாக மேற்கொள்ள வேண்டும்.
சிம்மம்: இன்று முக்கிய முடிவுகள் எடுக்க உகந்த நாள் அல்ல. அதிர்ஷ்டம் உங்களுக்கு சாதகமாக இருக்காது. உங்கள் மேலதிகாரிகளுடன் சில மோதல்கள் காணப்படும். பணியில் கவனக் குறைவு காணப்படும். நீங்கள் அதிகமாக சேமிக்க இயலாது.
கன்னி: நீங்கள் நம்பிக்கையுடன் செயல்பட்டால் இன்று உங்கள் செயல்களில் வெற்றி கிடைக்கும். திட்டமிட்டு செயலாற்ற வேண்டியது அவசியம்.என்றாலும் நீங்கள் சில சவாலான சூழல்களை சந்திக்க நேரும்.
துலாம்: உங்களின் அனுசரனையான அணுகுமுறை உங்களுக்கு வெற்றியை பெற்றுத் தரும்.பல வாய்ப்புகள் காணப்படும். சக பணியாளர்கள் உதவிகரமாக இருப்பார்கள்.அவர்களின் ஆதரவு உங்களுக்கு வழி காட்டும்.
விருச்சிகம்: குடும்பத்தின் வளர்ச்சிக்கான செயல்களை தொடங்க உகந்த நாள். இன்று நீங்கள் நன்மையான பலன்கள் காண புத்திசாலித்தனத்துடன் செயல்பட வேண்டும்.இந்த வாய்ப்பை நன்கு பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
தனுசு: இன்று வளர்ச்சி காண்பதற்கு உங்கள் ஆற்றலை முழுவதுமாக பயன்படுத்துங்கள்.நேரத்தை நிர்வகிப்பதன் மூலம் எல்லாப் பணிகளையும் குறித்தநேரத்தில் முடிப்பீர்கள்.இதனால் நிதி நிலைமை மகிழ்சிகரமாக காணப்படும்.
மகரம்: உங்கள் புத்திசாலித் தனத்தை நீங்கள் நன்கு பயன்படுத்தினால் நீங்கள் அதிகம் சாதிக்கலாம்.இதனால் உங்களிடம் திருப்தி காணப்படும். உங்கள் இனிமையான போக்கின் காரணமாக அனைவரும் மகிழ்ச்சியுடன் இருப்பார்கள்.
கும்பம்: குடும்பத்தினரின் நலன் குறித்த எண்ணங்கள் உங்கள் மனதில் ஓடும். இதற்காக உங்கள் நேரத்தின் ஒரு பகுதியை இதற்கு ஒதுக்குவீர்கள்.இதனால் கவனமின்மை காணப்படும். எனவே கவனமாக இருக்க வேண்டும்.
மீனம்: அதிக சிந்தனை உங்களுக்கு குழப்பத்தையே ஏற்படுத்தும். இந்தப் போக்கை தவிர்த்து அமைதியாக இருக்க முயலுங்கள். பொறுமையாக இருந்து அமைதியாக கையாள்வது அவசியம்.