இன்றைய (10.06.2021) நாளின் ராசி பலன்கள்..!

Default Image

மேஷம்: இன்றைய நாள் சீரான முடிவுகளுக்கு சாதகமாக அமையாது. உங்கள் செயல்கள் சுமுகமாக நடப்பதற்கு அதிக அளவில் அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும். சில நேரங்களில் நம்பிக்கையின்றி காணப்படும்.

ரிஷபம்: இன்றைய நாளை ஆன்மீகக் காரியங்களுக்கு பயன்படுத்தலாம். அவை உங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும். பயணங்களுக்கான வாய்ப்புகள் காணப்படுகின்றன. உங்கள் செயல்களை கையாளும் பொழுது பொறுமையாக இருக்க வேண்டும்.

மிதுனம்: இன்று அசம்பாவிதங்களை தடுக்கும் வண்ணம் கவனமாக இருக்க வேண்டும். சூடான வார்த்தைகளை பேசுவதற்கான வாய்ப்பிருப்பதனால் முக்கியமாக அண்டை அயலாருடன் அல்லது மூன்றாவது நபருடன் பேசும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

கடகம் : இன்றைய நாள் நம்பிக்கைக்குரிய நாளாக இருக்கும். உங்களுக்கு விருப்பமான உயர்ந்த லட்சியங்களை நிறைவேற்றிக் கொள்ள முடியும். புதிய தொடர்புகளுக்கும் புதிய நட்பிற்கும் இன்று வாய்ப்புள்ளது.

சிம்மம்: இன்று உங்கள் விருப்பங்கள் நிறைவேறும் நாள். சிறிய முயற்சிகள் கூட இன்று உங்களுக்கு சாதகமாக அமையும். உங்களுடைய நண்பர்களின் மற்றும் கூட்டாளிகளின் ஆதரவு கிடைக்கும்

கன்னி:இன்று அசௌகரியங்கள் காணப்படும். முக்கியமான முடிவுகளை எடுப்பதற்கு உங்கள் மனதை தெளிவாக வைத்திருக்க வேண்டும். உங்கள் அருகில் உள்ளவர்கள் மற்றும்அன்பானவர்களிடம் பேசுவதில் தயக்கம் காணப்படலாம்.

துலாம்: உங்கள் உணர்ச்சிகளை நீங்கள் கட்டுப்படுத்த வேண்டும். பொறுமையுடனும் நம்பிக்கையுடனும் இருக்க வேண்டும். வெற்றியில் கவனத்தை செலுத்த நம்பிக்கை ஒன்றே அவசியம்.

விருச்சிகம்: இன்று அதிக அளவில் பலன்கள் கிடைக்கக்கூடிய சூழ்நிலைகள் காணப்படும். ஆன்மிக செயல்களில் ஈடுபடுவது ஆறுதலை அளிக்கும். மேலும் சவால்களை எதிர்கொண்டு வெல்வதற்கு உதவும்.

தனுசு: உங்கள் முயற்சிகளின் வளர்ச்சி சாதகமாக இருக்கும். உங்கள் சாதனைகள் மூலம் உங்கள் திறனை உணர முடியும். உங்கள் தொடர்பாடல் திறமை நன்கு வெளிப்படும்.

மகரம்: இன்றைய நாள் சாதகமான நாளாக அமையாது. நீங்கள் சாந்தமாகவும் மகிழ்ச்சியுடனும் இருப்பது நல்லது. இன்றைய செயல்களை சிறந்த முறையில் நிர்வகிக்க நீங்கள் வளைந்து கொடுத்து போக வேண்டியது அவசியம்.

கும்பம்: இன்றைய தினம் உங்கள் வளர்ச்சியில் தடைகள் காணப்படும். அறிவுப்பூர்வமாக சிந்தித்து செயல்படுவது நல்லது. பயத்தின் காரணமாக சோர்ந்து காணப்படுவீர்கள். மகிழ்ச்சி குறைந்து காணப்படும்.

மீனம்: இன்றைய நாள் பொதுவாக சிறப்பாக உள்ளது. நீங்கள் உயர்ந்த ஆற்றலுடன் காணப்படுவீர்கள். நடக்கும் நிகழ்வுகள் மகிழ்ச்சியை அளிக்கும். நீங்கள் உங்கள் ஆக்கத்திறனை மேம்படுத்தி மிகவும் சிறந்த முறையில் பணியாற்ற முடியும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்