இன்றைய (07.07.2021) நாளின் ராசி பலன்கள்..!

Default Image

மேஷம்: இன்று உங்களுக்கு தைரியம் குறைந்து காணப்படும். இருந்தாலும் தன்னம்பிக்கையுடனும் சந்தோசமாக இருங்கள். உங்கள் துணையுடன் நட்பான அணுகுமுறை வேண்டும்.

ரிஷபம்: இன்று நீங்கள் செய்யும் வேலைகளை உறுதியுடனும் கவனமான செய்ய வேண்டும். இன்று முக்கியமான முடிவுகள் எடுப்பதற்கு நல்ல நாள் இல்லை. ஆன்மீக ஈடுபாட்டின் மூலம் ஆறுதல் பெறலாம்.

மிதுனம்: இன்றைய நாள் நீங்கள் நினைத்த உயரத்தை அடைவதற்கு மிகவும் சிறந்த நாளாக அமையும். உங்கள் திறமைகளை மிகவும் உறுதியுடன் வெளிப்படுத்த வாய்ப்பு நிறைந்த அற்புதமான நாள்.

கடகம் : இன்றைய நாள் உங்கள் வாழ்வின் முக்கியமான முடிவுகள் எடுப்பதற்கு ஒரு சிறந்த நாள். உங்கள் சகோதரர்கள் மற்றும் சகோதரிகளின் மூலம் ஆதரவு கிடைக்கும் நாள். இன்று உங்களுக்கு பணவரவு அதிகமாக காணப்படும்.

சிம்மம்: இன்று நடைமுறைக்கு ஏற்ற மற்றும் கருத்துள்ள செயல்களில் ஈடுபடுங்கள். முன்கூட்டிய திட்டமிடல் வெற்றிக்கு வழிவகுக்கும். பணிகளை குறித்த நேரத்தில் முடிக்க இயலாது.

கன்னி: இன்று முன்னேற்றம் காணப்படாது. இன்று எளிதில் உணர்ச்சிவசப்படுவீர்கள். எதையும் இலேசாக எடுத்துக்கொள்ளுங்கள். பிரார்த்தனைக்கு நேரம் எடுத்துக் கொள்ளுங்கள்.

துலாம்: இன்று நம்பிக்கையான வெற்றிகரமான நாள். நீங்கள் இன்று முக்கியமான முடிவுகளை எடுக்கலாம்.கடின உழைப்பும் அர்ப்பணிப்பும் வெகுமதிகளை பெற்றுத் தரும். நீங்கள் உங்கள் பணிகளை உற்சாகத்துடன் செய்வீர்கள்.

விருச்சிகம்: இன்று உங்கள் இலட்சியங்கள்நிறைவேறும் பரிபூரணமான நாள். மகிழ்ச்சிகரமான தருணங்கள் சந்தோஷத்தையும் உற்சாகத்தையும் அள்ளித்தரும். இன்று முக்கியமான முடிவுகள் எடுக்க உகந்த நாள்.

தனுசு: இன்று தடைகளை வென்று திருப்திகரமாக இருக்கும் நாள். யோகா மற்றும் தியானம் மேற்கொண்டு கவலைகளை நீக்கி மனதை அமைதியுடன் வைத்துக் கொள்ளுங்கள்.பணிகள் சம்பந்தமாக சில இடையூறுகள் காணப்படும்.

மகரம்: இன்றைய நாள் சாதகமாக இல்லை. நீங்கள் சவாலான சூழ்நிலைகளை சந்திக்க வேண்டியிருக்கும் குடும்பப் பிரச்சினைகள் மற்றும் அதிகரிக்கும் ஒப்புக் கொண்ட பொறுப்புகள் கவலையை அளிக்கும். 

கும்பம்: நண்பர்களின் ஆதரவு மகிழ்ச்சியை அளிக்கும். உங்கள் நேரத்ததை வேலையில் ஈடுபடுவதில் கழிப்பதன் மூலம் உங்கள் குறிக்கோளை அடைய முடியும். 

மீனம்: நீங்கள் பாதுகாப்பற்ற உணர்வைப்பெறுவீர்கள். அசௌகரியங்கள் ஏற்படலாம். இன்று பணிச்சுமை அதிகமாகக் காணப்படும். பணிகளை திட்டமிட்டுச் செய்வது பணியில் வெற்றி பெற உதவிகரமாக இருக்கும்

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்