இன்றைய (03.07.2021) நாளின் ராசி பலன்கள்..!

Default Image

மேஷம்: இன்று நீங்கள் பொறுமையிழந்து காணப்படுவீர்கள் எனவே பிரார்த்தனை மற்றும் வழிபாடு மூலம் ஆறுதல் பெறலாம். தேவையற்ற வார்த்தைகளை தவிர்க்க கவனமாக பேச வேண்டும்.

ரிஷபம்: இன்று உங்களுக்கு இனிமையான நாளாக இருக்கும் அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் வர வாய்ப்புள்ளது. முக்கிய முடிவுகள் எடுக்க இன்று சிறந்த நாள்.பணியிடத்தில் சாதகமான பலன்கள் காணப்படும்.

மிதுனம்: இன்று நீங்கள் தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். இன்று உங்களுக்கு கூடுதல் நன்மைகள் கிடைக்கும். இன்று முக்கிய முடிவுகள் எடுக்கலாம்.பணியிடத்தில் வளர்ச்சி காணப்படும்.

கடகம் : இன்று உங்களுக்கு சவால்கள் நிறைந்து காணப்படலாம். மனக் குழப்பங்களை எதிர்கொள்ள நேரலாம்.இசை கேட்பதன் மூலம் மன ஆறுதல் பெறலாம்.பணிகளை குறித்தநேரத்தில் முடிக்க இயலாது.

சிம்மம்: இன்று உங்களுக்கு சாதகமான நாளாக அமையாது. பொறுமையான அணுகுமுறை மேற்கொள்ள வேண்டும். நற்பலன் காண உணர்வுகளை கட்டுப்படுத்த வேண்டும். குறித்தநேரத்தில் பணியை முடிப்பது கடினமாக இருக்கும்.

கன்னி: இன்று மகிழ்ச்சியும் உற்சாகமும் நிறைந்திருக்கும். திரைப்படம் பார்த்தல், இசை கேட்டல் போன்ற பொழுது போக்கு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள்.

துலாம்: இன்று நீங்கள் உற்சாகத்துடனும் ஆர்வத்துடனும் காணப்படுவீர்கள்.இந்தப் போக்கின் காரணமாக உங்கள் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி காண்பீர்கள். இன்று முக்கிய முடிவுகள் எடுக்க உகந்த நாள்.

விருச்சிகம்: இன்று நீங்கள் பொறுமையை வளர்த்துக் கொள்ள வேண்டியது அவசியம். முக்கிய முடிவுகள் எதையும் இன்று எடுக்காதீர்கள். அமைதியுடனும் கட்டுப்பாட்டுடனும் இருங்கள்.

தனுசு: இன்று சிறப்பான பலன்கள் கிடைக்க உகந்த நாள் அல்ல. என்றாலும். ஆன்மீக ஈடுபாடு மற்றும் இறை வழிபாடு மூலம் நீங்கள் ஆறுதல் பெறலாம். உங்கள் பணிகளை சிறப்பாக மேற்கொள்ள கவனமும் விழிப்பும் தேவை.

மகரம்: இன்று உங்களுக்கு சிறந்த நாளாக அமைக்க. நற்பலன்கள் நடக்கும் நாள். உங்கள் முயற்சிகளுக்கு பலன் கிடைக்கும். இன்றைய செயல்கள் எளிதாக நடக்கும். பணியிடச் சூழல் மகிழ்ச்சிகரமாக இருக்கும்.

கும்பம்: இன்று உங்கள் வளர்ச்சி குறித்த கவலை காணப்படும். என்றாலும் தேவையற்ற விஷயங்களுக்கு வருந்தாதீர்கள். புத்திசாலித் தனத்தை பயன்படுத்தி சாதகமான பலன்களைக் காணுங்கள்.

மீனம்: இன்று அனுகூலம் சற்று குறைந்து காணப்படும். பாதகமான பலன்களால் கவலை காணப்படும். என்றாலும் மனதை மகிழ்சியாகவும் அமைதியாகவும் வைத்துக் கொள்ளுங்கள். பணியிடச் சூழல் சிறிது மந்தமாக இருக்கும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்