மேஷம் : இன்று தனவரவு தாராளமாக உங்களை நாடி வரும் நாள். பிள்ளைகளின் செயல்பாடுகள் மூலம் பெருமை உண்டு. உங்களை விட்டு விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்து இணைவர்.பிரச்சினைகள் அகலும். எதிர்கால நலன் கருதி முடிவு எடுப்பீர்கள். வரவு திருப்தி தரும்.
ரிஷபம் : எதிர்பார்த்தபடியே தொழில் லாபம் கிடைக்கும் நல்ல நாள். அதிர்ஷ்ட வாய்ப்புகள் இல்லம் தேடி வரும்.வழக்குகளில் வெற்றி கிட்டும். ஆன்மீகத் திருப்பணிகளில் ஆர்வம் ஏற்படும்.
மிதுனம் : இன்று மனதிற்கினிய சம்பவம் ஒன்று மாலை நேரத்தில் நடைபெறும் நாள்.அனுபவத்தின் வழியே நல்ல பலன்களை காணுவீர்கள்.கொடுக்கல் வாங்கல்களில் ஒழுங்காகும். உங்களின் புதிய முயற்சிக்கு நண்பர்கள் தோள் கொடுத்து உதவுவர்.தொழிலில் முன்னேற்றம் ஏற்படும்.
கடகம் : இன்று உங்களின் வருமானம் உயரும் நாள். சகோதர வழியில் ஒத்துழைப்பு உண்டு. தொலைத்த பொருள் ஒன்று திரும்பவும் கைக்கு வந்து சேரும். நாட்டுப்பற்றுமிக்கவர்களை சந்தித்து மகிழ்ச்சி அடைவீர்கள்.அவர்கள் மூலமாக நல்ல செய்தி வந்து சேரும். வாகனத்தை மாற்றம் வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கும்.
சிம்மம் : தனவரவு அதிகரிக்க கூடிய நாள். மகிழ்ச்சியைத் தரும் சம்பவம் ஒன்று இல்லத்தில் நடைபெறும். பிரச்சனைகள் நல்ல தீர்வு பெறும். பெற்றோர் இடத்தில் பிரியம் கூடும். தொழிலை விரிவுபடுத்த நீங்கள் எடுக்கும் முயற்சி கைகூடும்.
துலாம் : இன்று உங்களின் தேவைகள் எல்லாம் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும் நாள். உத்யோக மாற்றம் பற்றிய சிந்தனையானது மேலோங்கும். சகோதர வழியில் சச்சரவு ஏற்பட வாய்ப்பு உண்டு. நம்பியவர்கள் ஏமாற்ற வாய்ப்புள்ளது குடும்பச்சுமை கூடும்.
விருச்சிகம் :இன்று கந்தபெருமானை வழிபட்டு காரியங்களை சாதிக்கவேண்டிய நாள். உங்களின் எதிர்பார்ப்புகள் எல்லாம் நிறைவேறும். பொருளாதாரம் உயரும். தொழில் முயற்சிக்கு நண்பர்களின் ஆதரவு கிடைக்கும்.யில் ஈடுபடுவீர்கள். உறவினர்கள் உதவிக்கரம் நீட்டுவர்.
தனுசு: எதையும் சாமர்த்தியமாகப் பேசிச் சமாளித்து விடுவீர்கள். வரவும், செலவும் சமமாக இருக்கும்.இன்று பிரபலமானவர்களை சந்தித்து மகிழ்வீர்கள். மங்கல ஓசை கேட்பதற்கான அறிகுறி தோன்றும். பங்குதாரர்களிடம் சற்று விழிப்புணர்ச்சி தேவை.
மகரம் : இன்று பொதுவெளியில் உங்களின் செல்வாக்கு உயருகின்ற நாள். புதிய ஒப்பந்தங்கள் இல்லம் தேடி வரும். உங்களை உதாசீனப்படுத்திவர்கள் எல்லாம் உங்களை பார்க்க விரும்பி பி வந்து சேருவர். குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் சம்பவம் நடைபெறும்.
கும்பம் :இடம் வாங்க நீங்கள் இதுவரை எடுத்து வந்த முயற்சி கைகூடும் நாள். இல்லம் தேடி உறவினர்களின் வருகை உண்டு. கடந்த சில தினங்களாக இருந்து வந்த வேலைப்பளுவானது குறையும். வாகன யோகம் ஏற்படும்.
மீனம் : இன்று முக்கியப் புள்ளிகளைச் சந்தித்து எதிர்காலம் கருதி முடிவெடுக்கும் நாள். நீண்ட தூரப் பயணங்களை மேற்கொள்ள விரும்பும் மீனராசிக்காரர்களுக்கு வாய்ப்புகள் தானே தேடிவரும். கையில் பணப்புழக்கம் அதிகரிக்கும். உத்யோகத்தில் உயர்வு கிடைக்கும்.
தூத்துக்குடி : தமிழ்நாடு தொழில்துறை சார்பில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மினி டைடல் பார்க் அமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில்…
மெல்போர்ன் : ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது , பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலியா அணியுடன் பார்டர்…
தென் கொரியா : சின்சான்ஜி கிறிஸ்தவ சபையானது, 1984-ல் தென் கொரியாவின் சியோலில் தொடங்கப்பட்டது. அதன் பின்னர் சர்வதேச அளவில்…
விழுப்புரம் : நேற்று விழுப்புரம் மாவட்டம் பட்டானூரில் சங்கமித்ரா திருமண மண்டபத்தில் பாட்டாளி மக்கள் கட்சி பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.…
மெல்போர்ன் : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. இதுவரை நடந்த…
புதுச்சேரி : புதுச்சேரி மாநில அரசின் வருவாயை அதிகரிக்கும் நோக்கில், மத்திய அரசு புதுச்சேரி மாநிலத்தில் பெட்ரோல் டீசலுக்கு விதிக்கும்…