கன்னி : அலைபேசி மூலம் பொன்னான செய்தி வந்து சேரும் நல்ல நாள். வாங்கல் மற்றும் கொடுக்கல்கள் ஒழுங்காகும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். நேற்று நடந்த பிரச்சினை ஒன்று இன்று நல்ல முடிவிற்கு வரும்.
துலாம் : அலைபேசி வழியாக அனுகூலமான செய்திகள் கிடைக்கும் நாள். வசதி வாய்ப்புகளை பெருக்கிக் கொள்ள இன்று முன் வந்து செயல்படுவீர்கள். மாற்று இனத்தவர்கள் உங்களின் தொழில் முன்னேற்றத்திற்கு உதவுவர்.
விருச்சிகம் : இன்று வி.ஐ.பி.க்களைச் சந்தித்து மகிழுவீர்கள். விலையுயர்ந்த பொருட்களை வாங்கும் முயற்சியானது கைகூடும். பொருளாதார நிலை உயரம் காணும். நண்பர்கள் நல்ல மூலம் மனத்திற்கு இனிய தகவல் ஒன்று வந்து சேரும்.
தனுசு :இன்று லாபகரமான நல்ல நாள். தொழில் ரீதியாக புதிய வாய்ப்புகள் கிடைக்கும். கொடுத்த வாக்கைக் காப்பாற்றி மகிழ்வீர்கள். எதிர்பார்த்த வருமானத்தை விடக் கூடுதலாக இருக்கும். சொத்துகள் வாங்குவதற்கான யோகம் ஏற்பட்டுள்ளது.
மகரம் : இன்று தங்களின் எண்ணங்கள் எளிதில் நிறைவேறுகின்ற நல்ல நாள். வளர்ச்சியில் ஏற்பட்டு வந்த தளர்ச்சியானது அகலும். பூர்வீக முறையான லாபம் கிடைக்கும். ஆடம்பரப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
கும்பம் : உங்களை விலகிச் சென்றவர்கள் மீண்டும் விரும்பி வந்து சேருகின்ற நாள். அண்டை அயலார்களிடம் அளந்து பேசுவது பழகுவது நல்லது. பணப்புழக்கம் அதிகரித்த போதும் அடுத்தடுத்த செலவு ஏற்படும்.மனக்குழப்பம் ஏற்பட வாய்ப்புள்ளது.
மீனம் : இன்று ஆரோக்கியத்தில் தெளிவு பிறக்கும் நாள். உங்களின் செயல்பாடுக்கு வெற்றி கிடைக்கும். ஆன்மீக வழிபாட்டில் வரம் தருகின்ற தெய்வங்களை வழிபாடு செய்வது நல்லது. பிள்ளைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்து மகிழ்ச்சி அடைவீர்கள்.