இன்றைய (21.01.2020) நாள் எப்படி இருக்கு!? ராசி பலன்கள் இதோ…

Default Image

மேஷம் : விரயங்கள்  ஏற்படக் கூடும் நாள். செய்யும் தொழிலில் வேலையாட்களால் சிறிது பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது கவனம் தேவை. ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட  அச்சுறுத்தல்கள் எல்லாம் உருவாகி மறையும். பணத் தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தி ஆகும்.

ரிஷபம் : திருமண வாய்ப்புகள் கைகூடுன்ற நாள். வாகனத்தை புதுப்பிக்கும் எண்ணம் ஏற்படும். அஞ்சல் வழி மூலம் சுபச் செய்திகள் வந்து சேரலாம்.நண்பர்கள் உரிய சமயத்தில் கைகொடுத்து உதவும் நாள்.

துனம் : தங்களின் நட்பு வட்டம் விரிவடைகின்ற  நாள். உத்தியோகத்தில் உயர்ந்த நிலையை எட்ட உரிய சந்தர்ப்பம் கைகூடி வரும்.தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

கடகம் : கொடுத்த வாக்கைக் காப்பாற்றுகின்ற நாள். குழந்தைகள் நலனில் அக்கறை காட்டி மகிழ்வீர்கள். தங்களது சகோதர வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.நீண்ட நாளாக தொல்லைக் கொடுத்து வந்த பிரச்சினை முடிவிற்கு வரும்.

சிம்மம் : பணவரவு திருப்தி தருகின்ற நாள். குடும்பத்தினரிடையே மகிழ்ச்சி அதிகரிக்கும்.  அலுவலகப்பணிகள் அனைத்தும் வேகமெடுத்து  நடைபெறும். ஆற்றல் மிக்கவர்களின் ஒத்துழைப்பால் தங்களது தொழிலில் முன்னேற்றம் கண்டு மகிழ்வீர்கள்.

கன்னி : தெய்வீக சிந்தனையானது மேலோங்கும் நாள். தங்கலுடைய கடின முயற்சிக்கு வெற்றி கிடைக்கும். கொடுக்கல் மற்றும் வாங்கல்கள் ஒழுங்காகும். குடும்பச்சுமையானது கூடும். பாக போன்ற பிரிவினைகள்  சுமுகமாக முடியும்.

துலாம் : இன்று உங்களின் பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும் நல்ல நாள்.  மங்கல ஓசை  இல்லத்தில் கேட்பதற்கான அறிகுறிகள் தோன்றும். ,மேலும் தங்களின் செயல்பாடுகளையும் திறமையும் பார்த்து மற்றவர்கள் வியப்படைவர்.

விருச்சிகம் : தங்கள் எதிர்பார்ப்புகள் எல்லாம் நிறைவேறும் நாள். வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உங்ககின் வளர்ச்சிக்கு உறவினர், நண்பர்கள் போட்டி போட்டுக்கொண்டு உதவ முன்வருவர்.

தனுசு : பாதியில் நின்று விட்ட பணிகள் வேகமெடுக்கும் நாள். உங்களை உதாசீனம் செய்தவர்கள் எல்லாம் உங்களின் இல்லம் தேடி வருவர். தாமதமாக பணியைச் செய்ய ஆரம்பித்தாலும் சரியான நேரத்திற்கு முடித்து கொடுத்துவிடுவீர்கள்.ஆரோக்கிய சீராகும்.

மகரம் : இன்று மகிழ்ச்சி கூடுகின்ற நாள். வாழ்க்கைத் தேவைகள் எல்லாம் பூர்த்தி ஆகும். வெளிவட்டாரத் தொடர்புகள் அனைத்தும் விரிவடையும். தொலைபேசி வழியாக தொழிலுக்கு உறுதுணை புரியும் செய்தி வந்தடையலாம். வரன்கள் வந்து வாயிற்கதவைத் தட்டுகின்ற நாள்.

கும்பம் : உங்களுடைய முயற்சிக்கு வெற்றி கிடைக்கும் நாள். பிள்ளைகளுக்கு சுபகாரியப் பேச்சுகள் நல்ல முடிவிற்கு வரும்.  முக்கியப் புள்ளியின் சந்திப்பு தொழில் வளர்ச்சிக்கு கைக் கொடுக்கும்.பணத்தேவைகள் இன்று உடனுக்குடன் பூர்த்தியாகும்.

மீனம் : இன்று சேமிப்பில் அக்கறை அதிகரிக்கும் நாள். கைமாற்றாக யாருக்காவது கொடுத்த தொகை திரும்பக் கிடைக்கும். உங்களின் நிர்வாகத் திறமைக்கு தக்க பாராட்டு கிடைக்கும். சொந்தகாரர்கள் மத்தியில் உங்களின் மதிப்பு கூடும். உங்களை பிரிந்து சென்றவர்கள் பிரியமுடன்  மீண்டும் வந்து இணைவர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்