இன்றைய (14.02.2020) நாள் எப்படி இருக்கு!? ராசி பலன்கள் இதோ

Default Image

மேஷம் :பொருளாதார நிலை உயர்கின்ற நாள். சகோதர வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தொழிலில் நன்மை வந்து சேரும். குடும்பத்தினரிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் அகலும்.

ரிஷபம் : வருமானம் திருப்தி தரும் நாள்.பொறுமையோடு செயல்படுவீர்கள். பிள்ளைகளின் நலனில் அக்கறை காட்டி மகிழ்வீர்கள். தொழில் சம்பந்தமாக எடுக்கும்  புதுமுயற்சிக்கு வெற்றி கிடைக்கும்.

மிதுனம் : தாய்-தந்தை மீது பிரியம் கூடும் நாள். நண்பர்கள் மனதிற்கு இனிய தகவலைத் தருவர். உத்தியோகத்தில் குடைச்சல் கொடுத்து வந்த சக பணியாளர்களின் உபத்திரங்கள் அகலும்.

கடகம் : இன்று யார் நீங்கள் என்ற உங்கள் திறமைகள் வெளிப்படும் நாள். ஆரோக்கியம் மனநிம்மதியைத் தரும். எடுத்த முயற்சி கைகூடும். உறவினர்களின் ஒத்துழைப்போடு நினைத்த காரியம் ஒன்றைச் செய்து முடிப்பீர்கள்.

சிம்மம் : பிரச்சனைகள் எல்லாம் அகலும் நாள்.பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பழைய பாக்கிகள் எல்லாம் வசூலாகும்.பயணங்களால் மகிழ்ச்சி ஏற்படும்.

கன்னி : நினைத்த காரியம் நல்லபடியாக நடைபெறும் நாள். கொடுக்கல் மற்றும் வாங்கல்கள் ஒழுங்காகும்.ஆரோக்கியத்தில் அக்கறை தேவை.

துலாம் : மற்றவர் மத்தியில் பக்குவமாய் பேசிப்பாராட்டுக்களைப் பெறும் நாள்.உத்தியோகத்தில் ஊர்மாற்றம் செய்யும் எண்ணம் மேலோங்கும். குடும்பத்தினரை அனுசரித்துச் செல்வது நல்லது.

விருச்சிகம் : இன்று சொல்லைச் செயலாக்கிக் காட்டும் நாள். தொலைபேசி தகவல் மகிழ்ச்சி  தரும். சொத்துகளில் லாபம் கிடைக்கும். பயணமொன்றை மேற்கொண்டு மகிழ்வீர்கள்.

தனுசு : இன்று மனம் மகிழும் சம்பவங்கள் நடைபெறும் நாள். புதிய முதலீடுகள் செய்யும் எண்ணம் தொழிலில் மேலோங்கும். புண்ணிய காரியங்களை செய்யும் யோகம் ஏற்பட்டுள்ளது. பணவரவு திருப்தி மனதிற்குத் தரும்.

மகரம் : இன்று  மாலையில் கலகலப்புடன் மனதிற்கு இனிய நிகழ்வு நடைபெறும் நாள். தந்தை வழியில் ஏற்பட்ட மனக்கசப்புகள் மறையும். புண்ணிய காரியங்களில் நாட்டம் அதிகரிக்கும்.

கும்பம் : எதிர்த்து நின்ற எதிரிகள் இருந்த இடம் தெரியாமல் மறையும் நாள். வாழ்க்கைத் துணை வழியே மகிழ்ச்சி கிடைக்கும்.வரவு திருப்திகரமாக இருக்கும். உங்களை பிரிந்து சென்ற வர்கள் பிரியமுடன் வந்து இணைவர்.நல்ல தகவல் ஒன்று வந்து சேரும். நீண்ட நாளாக எண்ணி இருந்த காரியம் நிறைவேறும்.

மீனம் : குலதெய்வ வழிபாடு குதுகுலத்தை கொடுக்கும் நாள். கோபத்தை கட்டுப்படுத்துவது நல்லது.உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மனகுழப்பங்கள் அகலும்.திட்டமிட்ட காரியத்தை செய்து முடிப்பீர்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்