இன்றைய (07.02.2020) நாள் எப்படி இருக்கு!? ராசி பலன்கள் இதோ

Published by
kavitha

மேஷம் :பணத்தேவை பூர்த்தியாகும் நாள். பக்குவமான பேச்சால் காரியங்களை சாதித்துக் கொள்வீர்கள். மாமன் -மச்சான் வழியில் ஏற்பட்டிருந்த மனக்கசப்பு அகலும் குலதெய்வ வழிபாட்டில் கவனம் செலுத்துங்கள் நினைத்தவை நிறைவேறும்.

ரிஷபம் : அஞ்சல் வழியில்  ஆச்சரியப்பட வைக்கும் செய்தி கிடைக்கும் நாள். அடுத்தவர் நலனில் அக்கறை காட்டுவீர்கள். எதிர்பார்த்தபடி ஆதாயம் வந்து சேரும். நண்பர்கள் உங்களுக்காக போட்டி போட்டுக் கொண்டு உதவ முன்வருவார்கள்.

மிதுனம் : நீங்கள் எதிர்பார்த்து காத்தருந்த அரசு வழி சலுகைகள் கிடைக்கும் நாள். பெண் பிள்ளைளால் பிரச்சினை தீரும். உத்தியோக மாற்றம் மற்றும் வீடு மாற்றம் பற்றிய சிந்தனை மேலோங்கும்.

கடகம் : இன்று மனதால் மறக்க முடியாத சம்பவங்கள் நடைபெறும் நாள். பாதியில் நின்ற விட்டதே என்று எண்ணிய பணி மீண்டும் தொடரும். தைரியம் மற்றும் தன்னம்பிக்கை வெளிப்படும். கூட்டுத்தொழில் வெற்றித் தேடி தரும். வங்கிகளில் சேமிப்பானது உயரும்.

சிம்மம் : தொலைத்தூரத்தில் இருந்து நல்ல தகவல் வந்து சேருகின்ற நாள்.சுகங்களும், சந்தோ‌ஷங்களும் உள்ளத்தில் அதிகரிக்கும். வெளியூர்களுக்கு தொழில் ரீதியாக பயணம் மேற்கொள் வீர்கள். பணியாளர் தொல்லைகள் அகன்று புத்துணர்வு கிடைக்கும்.

கன்னி : இன்று அதிர்ஷ்ட வாய்ப்புகள் அலைமோதுகின்ற நாள். நீங்கள் எதாவது போட்டி, பந்தயங்களில் பங்கேற்றால் அதில் வெற்றி கிடைக் கும். பிள்ளைகள் வழியில் நல்லச் செய்தி வந்து சேரும். வீட்டிற்குத் தேவையான பொருட் களை வாங்கி மகிழுவீர்கள்.

துலாம் : முன்னேற்றப் பாதையை நோக்கி மும்முரமாக அடியெடுத்து வைக்கும் நாள். இன்று பணம் பல வழிகளில் வந்து  உங்களது பையை நிரப்பும். ஆற்றல் மிக்கவர்களின் ஆதரவு இன்று கிடைக்கும். சகோதரர்கள் உங்கள் பணிக்கு ஒத்துழைப்பர்.

விருச்சிகம் : நேற்றைய பிரச்சணை இன்று நல்ல முடிவிற்கு வரும்.மதியத்திற்கு மேல் மனக்குழப்பங்கள் அகலும். உங்கள் குணமறிந்து குடும்பத்தினர் நடந்து கொள்வர். வாங்கல் மற்றும் கொடுக்கல்கள் திருப்தி தரும்.

தனுசு : உங்களின் வளர்ச்சிக்கு துணையாக இருந்தவர்களை இன்று சந்தித்து மகிழும் வாய்ப்பு கிடைக்கும் நாள்.வரவு மற்றும் செலவு சமமாகும். வாகனமாற்றம் செய்யலாமா என சிந்தித்து கொண்டே இருப்பீர்கள். தொழில் பங்குதாரர்களிடம் சற்று விழிப்புணர்ச்சி தேவை.

மகரம் : இன்று எடுக்கும் காரியங்களில் எளிதில் வெற்றி கிடைக்கும் அற்புதமான நாள். கூட்டுத் தொழிலில் எதிர்பார்த்த லாபம்  வந்து சேரும்.அரசியல்வாதிகளால் இன்று அனுகூலம் உண்டு.

கும்பம் : அடுத்தவர்காக  காட்டிய அக்கறைக்கு ஆதாயம் கிடைக்கும் நாள். சுபச்செய்திகள் இல்லம் வந்து சேரும் நாள்.கூட்டுத் தொழிலில் லாபம் கிடைக்கும். குடும்பச்சுமையானது கூடும். உத்தியோகத்தில்  கூடுதல் பொறுப்புகள் உங்களை நாடி வரும்.

மீனம் : தொலைதூரத்திலிருந்து இன்று நல்ல தகவல் வந்து சேரும் நாள். தொழிலில் வளர்ச்சி அதிகரிக்கும். குடும்ப ஒற்றுமைக்கு கெடுவிளைவித்து வந்தவர்கள் தானாக விலகுவார்கள். வருங்கால நலன்கருதி புதிய திட்டங்கள்  தீட்டுவீர்கள் மகிழ்வீர்கள்.

Recent Posts

தமிழகத்தில் புதன்கிழமை (25/12/2024) இங்கெல்லாம் மின்தடை!

தமிழகத்தில் புதன்கிழமை (25/12/2024) இங்கெல்லாம் மின்தடை!

கோவை : கரையாம்பாளையம், சின்னியம்பாளையம், மைலம்பட்டி, ஆர்.ஜி.புதூர், கைக்கோலம்பாளையம், வெங்கிட்டாபுரம் பல்லடம் : தெற்கு அவினாசிபாளையம், சக்தி நகர், கொடுவாய்,…

3 hours ago

டங்ஸ்டன் சுரங்கம் விவகாரம் : மறு ஆய்வு செய்ய மத்திய அரசு பரிந்துரை!

டெல்லி : மதுரை மேலூரில் உள்ள நாயக்கர்பட்டி மற்றும் அரிட்டாபட்டி பகுதிகளில், டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும் என…

4 hours ago

இது தெரியாம போச்சே! இலவசமாக யூடியூப் பிரீமியம் வாங்குவது எப்படி தெரியுமா?

சென்னை : இன்றயை காலகட்டத்தில் நாம் அதிகமாக பயன்படுத்தும் சமூக வலைத்தளங்களில் ஒன்றாக யூடியூப் உள்ளது. இதில் பொழுதுபோக்குக்காகவும், சில முக்கிய…

4 hours ago

வாய்ப்பு கொடுத்த கேப்டன்! வெஸ்ட் இண்டீஸை வெளுத்து விமர்சனத்துக்கு பதிலடி கொடுத்த ஹர்லீன் தியோல்!

குஜராத் : இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தற்போது மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 3 டி20 மற்றும்…

6 hours ago

போட்றா வெடிய…  சாம்பியன்ஸ் டிராபி போட்டி அட்டவணை இதோ! IND vs PAK போட்டி எப்போது?

டெல்லி : உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர்களுக்கு இடையே உள்ளஆண்டுகளில் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஐசிசி சாம்பியன்ஸ் டிராபிக்கான…

6 hours ago

ஹூஸ்டன் தமிழாய்வு இருக்கை – மேலும் ரூ.1.50 கோடி ஒதுக்கீடு செய்த தமிழக அரசு!

சென்னை :  அமெரிக்காவின் ஹூஸ்டன் மாநகரத்தில் 1927ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழி, இலக்கியம், பண்பாடு மற்றும்…

6 hours ago