உலகை பார்க்கதுடிக்கும் பார்வைகள்….(World Sight Day) விழித்துக்கொண்டால் விழிப் பிரச்சணை இல்லை!

Published by
Kaliraj

உலக அழகையும் தன்முடன் உள்ளவர்களையும் பார்க்க துடிக்கும் அந்த பார்வைகளின் ஏக்கத்தை ஒரு போதும் எழுத்துக்களால் சொல்லமுடியாது.சில மணி துளிகள் மின்சாரம் தடைபட்டாலே நம்மால் இருட்டில் இருக்க மாட்டோம் ஆனால் வாழ்நாள் முழுவதும் இருட்டில் வாழும் அந்த பார்வைகள்…அவற்றிற்கு ஆதரவும்,அன்பு, அனுசரனை இவைகளே அவர்களுக்கு தற்போது வெளிச்சமாக இருந்து வருகிறது.

அத்தகையோர்க்காக ஜ.நா விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் அக்.,8 உலக பார்வைகள் தினத்தை கொண்டாடப்பட்டு வருகிறது.

மேலும் உலக சுகாதார நிறுவனம் கண் பார்வையின்மை மற்றும் பார்வைக்குறைபாடு பற்றி உலக அளவில் கவனத்தை ஈர்ப்பதற்காக பார்வையிழப்பு பற்றிய விழிப்புணர்வுகளை அதிகரிக்கவும் உலகப் பார்வை தினம் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் இரண்டாம் வியாழக்கிழமை கடைப்பிடிக்கப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டும் உலக பார்வை தினம் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் கண் நலம் பற்றிய செய்திகளை விழிப்புணர்வினை மேம்படுத்துமாறு ஐ.நா கேட்டுக் கொள்கிறது.

மனித உடலில் கண் இந்த உலகின் அழகை காண  செய்யும் இறைவனின்  சிறந்த கொடையாகும்.அழகான கண்கள் முகத்திற்கு அழகும் கூட. ஆனால் இந்தக் கண்களின் ஆரோக்கியமும், அழகும் நம்மால் செய்யப்படும் சில தவிர்க்கப்பட வேண்டிய வேலைகளால் பாதிக்கப்படுகின்றன. இரவு அதிக நேரம் கண்விழித்து இருப்பது, அதிக நேரம் டிவி, லேப்டாப் போன்றவற்றைக் காண்பது போன்றவை கண்களின் ஆரோக்கியத்தை மிகவும் கெடுக்க கூடியவையாகும்.

கண்பார்வை இழப்பைத் தடுப்பதே  உலக கண் பார்வை தினத்தின் மிக முக்கிய நோக்கமாகும். பிறவியிலேயே கண் பார்வை இல்லாதவர்கள், உணவு குறைப்பாட்டால் பார்வையை இழப்பவர்கள் இச்சமூதாயத்தில் பல இன்னல்களுக்கு ஆளாகி கடும் மன உளைச்சலை சந்திகின்றனர்.இதன் காரணமாகவே உலக சுகாதார அமைப்பின் முயற்சியால் உலக கண் பார்வை தினத்தில் நடத்தப்படும் முகாம்கள் மூலம் பார்வை குறைபாடுகள் தீர்க்க  வழிசெய்யப்படுகிறது.மேலும் இதன் மூலம் பார்வை குறைப்பாட்டிற்கு முக்கிய காரணிகளாக இருக்கும் கண் புரை, கண் அழுத்த நோய், கண்ணில் பூ விழுதல் போன்றவற்றிற்கு சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன.

உலக சுகாதார அமைப்பு உருவாக்கி உள்ள “விஷன் 2020” திட்டத்தில் 2020ம் ஆண்டிக்குள் நோய்களால் எந்த ஒரு மனிதரும் பார்வை இழக்கக்கூடாது என்பதை லட்சியமாக கொண்டு செயல்பட்டு வருகின்றது. மேலும், உலக கண் பார்வை தினத்தையொட்டி சமூக வலைத்தளங்களிலும் இது குறித்த தகவல்கள் பகிரப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆம் கண் ஒரு பொக்கிஷமே அதனைப் பாதுகாக்க வேண்டிய பொருட்கள் போல  பாதுகாக்க வேண்டும். நமது உள்ளத்து உணர்ச்சிகளை வெளிப்படையாக பிறர்க்கு உணர்த்துவது கண்களே. கண்களில் உண்டாகிற பிரச்னைகளை ஆரம்ப கட்டத்திலே சரி செய்வது நல்லது மேலும் ஆரோக்கியமான உணவு மூலம் இதனை தவிர்க்கலாம்.

முன்னோர்கள் இதற்கு தான் உணவே மருந்து என்று கூறினர்.ஆனால் மாறிவரும் சமூகத்தில் இவற்றை கடைபிடிக்க தவற விடுவதால் கண் பார்வை போன்ற என்னற்ற ஆரோக்கியத்தையும் தவறவிடுகிறோம் என்பதை மறக்கக் கூடாது.இப்பிரச்சனை பாரம்பரியமாக தொடரக்கூடும் வரும் சந்ததிக்கு ஆரோக்கியத்தை பரிசளிப்போம்.

 

Published by
Kaliraj

Recent Posts

“ஆமாம்., நாங்கள் பயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளித்தோம்!” பாகிஸ்தான் அமைச்சர் பரபரப்பு பேட்டி!

“ஆமாம்., நாங்கள் பயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளித்தோம்!” பாகிஸ்தான் அமைச்சர் பரபரப்பு பேட்டி!

இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக…

18 minutes ago

பதிப்புரிமை வழக்கில் சிக்கிய ஏ.ஆர்.ரஹ்மான் – ரூ. 2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு.!

டெல்லி : கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான தமிழ் திரைப்படமான பொன்னியின் செல்வன் 2 (PS2) இல் இடம்பெற்ற…

39 minutes ago

வீட்டுக்கு 200 ரூபாயில் ‘ஹை ஸ்பீடு’ இன்டர்நெட்! அமைச்சர் பி.டி.ஆர் அசத்தல் அறிவிப்பு!

சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொழில்துறை தொடர்பான மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது.…

1 hour ago

“பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நள்ளிரவில் மிரட்டப்பட்டுள்ளனர்” – ஆளுநர் ஆர்.என்.ரவி.!

உதகை : ஊட்டி ராஜ்பவன் மாளிகையில் இன்று (ஏப்.25) காலை துணைவேந்தர்கள் மாநாடு தொடங்கியது. மாநாட்டை குடியரசு துணைத் தலைவர்…

2 hours ago

“காஷ்மீர் எனக்கு 2 சகோதரர்களை கொடுத்துள்ளது” தாக்குதலில் தந்தையை இழந்த பெண் உருக்கம்.!

கொச்சி: நாட்டையே உலுக்கிய கடந்த செவ்வாய்க்கிழமை ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த கொடிய தீவிரவாத தாக்குதலில் தனது தந்தையை இழந்த கொச்சியைச்…

3 hours ago

காஷ்மீர் பயங்கரவாதிகள் ‘சுதந்திரப் போராளிகள்’.., புகழ்ந்து பேசிய பாக்., துணைப் பிரதமர்.!

இஸ்லாமாபாத் : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பயங்கரவாத சம்பவத்தைத் தொடர்ந்து இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதட்டங்கள் அதிகரித்துள்ளன. முதலில் இந்தியா சிந்து…

4 hours ago