விழிக்கு நிகர் ஏது?..விழிப்போடு இருப்போம்..உலக பார்வைகள் தினம் இன்று

Default Image

கண் பார்வையின்மை மற்றும் பார்வைக்குறைபாடு பற்றிய  விழிப்புணர்வினை மேம்படுத்த உலக சுகாதார நிறுவனத்தால் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் உலகம் முழுவதும் உலக பார்வைகள் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

இவ்உலகம் எவ்வளவு அழகு என்பதை படபிடித்து காண்பிக்க இறைவனால் அளிக்கப்பட்ட அற்புதன் தான் நமது கண்கள் . இத்தகைய கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த தவறினால் கண்களை தவறவிடுபோம் என்பது உண்மை கண்களை பாதிக்க செய்யும் செயல்களான கண் அதிக நேரம் விழித்திருப்பது, டிவி ,லேப்டாப் போன்றவற்றை அதிக நேரம் பார்ப்பது போன்றவை கண்களின் ஆரோக்கியத்தை கெடுக்கக் கூடிய ஒன்று கண்பார்வை இழப்பினை  தடுப்பதே, இந்த உலக  பார்வைகள் தினத்தின் முக்கிய இலக்காகும்.

மேலும் மரபு வழியாகவும், எதிர்பாராத விபத்துக்கள் மூலமாகவும் ஏற்படுகிறது.இதன் காரணமாக சமுகத்தில் அவர்கள் சந்திக்கும் அவலங்கள் கொஞ்சம் நஞ்சமில்லை, இன்னும் சொல்லவேண்டும் என்றால் அவர்களை பிச்சை எடுக்கும் அவலம் இன்று வரை இருந்து கொண்டு தான் வருகிறது.இவற்றை எல்லாம் தவிர்த்து அவர்களின் இருள் நிறைந்த வாழ்க்கையில் கல்வி மூலமாகவும்,தன்னமிக்கை மூலமாகவும் வெளிச்சத்தை ஏற்படுத்த முடியும் அதற்கு WHO மட்டும் போதாது இச்சமூகம் முன்வர வேண்டும்.அவர்களுக்கென்று சுயமான வாழ்க்கைத்திறன்களை மேம்படுத்தும் வகையில் அரசும் கொள்கைகளை உருவாக்க முன் வர வேண்டும்.

சமூகம் அவர்களை ஒதுக்காமல் ,தடை போடாமல் வளர்வதற்கு வாய்ப்புகளை உருவாக்கி தந்தால் நிச்சயம் அவர்களும் மிளிர்வார்கள் என்பதற்கு சமீபத்தில்  பார்வைத்திறனற்ற ஒரு இளம் பெண் IAS தேர்வில் தேர்ச்சிப்பெற்று வருங்கால ஆட்சியராக உருவெடுத்துள்ளார் என்பதே சான்று.அவர்களுக்கு  அனுதாபம் தேவையில்லை அடுத்தக்கட்ட நகர்வுக்கு நகர்த்தி செல்ல ஏணிகளே தேவை.

மேலும் பல குடும்பங்களில் ஏழ்மை நிலையால் இவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியது.இது ஒரு குறையேயன்றி நோய் அல்ல என்பதை அவர்களுக்கு தெரிவுப்படுத்த வேண்டியது ஒருவருடைய கடமையாகும்.குறை என்று நினைக்காமல் குறிக்கோளை காட்டினால் குறித்தவறாமல் சாதனைப்புத்தக்கத்தில் தங்களது பெயரை குறித்து வைப்பார்கள் என்பது சத்தியமே அதுவும் சாத்தியமே.. 🙂

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்