Today TNAssembly Live ; ஆளுநர் உரையும்… அதன் மீதான விவாதமும்..
தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று ஆளுநர் உரையுடன் தொடங்கியது. நேற்றைய கூட்டத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி , தமிழக அரசு கொடுத்த ஆளுநர் உரையை வாசிக்காமல் அதனை புறக்கணித்து சட்டப்பேரவையில் இருந்து பாதியில் வெளியேறினார். இதனால் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் முதல் நாளே பரபரப்பானது.
இன்று இரண்டாம் நாள் மற்றும் நாளை மூன்றாம் நாளில் ஆளுநர் உரையின் கீழ் விவாதம் நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து பிப்ரவரி 15ஆம் தேதி பதிலுரை நிகழ உள்ளது.அதற்கடுத்து தமிழக பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.