இன்றைய (25.02.2020) நாள் எப்படி இருக்கு!? ராசி பலன்கள் இதோ.!

Published by
kavitha

மேஷம் :செல்வாக்கு மேலோங்கும் நாள். பயணங்கள் பலன்களை தரும்.குடும்பத்தினரிடையே அன்பு அதிகரிக்கும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும்.புத்துணர்ச்சியோடு செயல்படுவீர்கள்.

ரிஷபம் : உத்யோகம் தொடர்பாக எதிர்பார்த்த தகவல் வந்து சேரும்.வாய்ப்புகளை திறமையாக பயன்படுத்து கொள்வீர். திட்டமிட்டப்படி காரியங்கள் நடைபெறும்.கல்யாண பேச்சுக்கள் சுமுக முடிவிற்கு வரும்.

மிதுனம் :  எல்லோர் மத்தியில் உங்கள் திறமை பளிச்சிடுகின்ற நாள். நினைத்த எண்ணம் நிறைவேறும்.  விருந்து விழா போன்றவைகளில் கலந்து கொள்வீர்கள். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும்.

கடகம் :மனக்குழப்பம் அகன்று தெளிவு பிறக்கும் நாள்.கனிவானப் பேச்சினால் காரியங்களைச் சாதித்துக் கொள்வீர்கள். தடைப்பட்ட காரியம் இப்போது நடைபெறும் அதே போல் தடைப்பட்ட வருமானமும் வந்து சேரும். உத்யோகத்தில் உடன் இருப்பர்களிடம் நிலவிய பனிப்போர் விலகும்.

சிம்மம் :இறைவழிபாட்டால் இனியவை காணவேண்டிய நாள்.நிதானத்தை கடைபிடிப்பீர்கள்.பொறுமையாக காரியங்களை சாதிப்பீர்கள்.கோபத்தை குறைப்பது நல்லது.வரவு திருப்தி தரும்.

கன்னி :  கனிவான பேச்சினால் காரியங்களை சாதித்து பெருமைப்படும் நாள். இடமாற்றம் பற்றிய சிந்தனை மேலோங்கும்.சிலரின் சொல்லுக்கு கட்டுப்பட்டு நடக்கின்ற சூழ்நிலை உருவாகும். பயணங்கள் அலைச்சல் ஏற்படும்.

துலாம் : பொதுவாழ்கையில் புகழ் கூடுகின்ற நாள். போட்டிகளில் வெற்றி காண்பீர்கள். கடன்சுமை குறையும். வேலை,கல்வியில் தொடர்பாக முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். ஆரோக்கியம் சீராகும்.

விருச்சிகம் :  வெற்றிச் செய்திகள் இல்லம் தேடி வரும் நாள். பணத் தேவைகள் உடனே பூர்த்தியாகும். தொலைபேசி தகவல் மனதிற்கு மகிழ்ச்சி தரும்.திட்டமிட்ட காரியத்தை திட்டமிட்டப்படியே நடைபெறும்.

தனுசு : பெற்றோர் இடத்தில் அன்பு அதிகரிக்கும் நாள். தொழில் ரீதியாக அனுபவ வாய்ந்தவர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். கால் நடை போன்றவை வளர்ப்பில் ஆர்வம் அதிகரிக்கும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு நண்பர்களோடு மகிழ்வீர்கள்.

மகரம் : உடன்பிறந்தவர்கள் மூலமாக சந்தோ‌ஷச் செய்தி வந்து சேரும் நாள். தடைபட்டு வந்த காரியங்கள் இனிதே நடைபெறும். அதிகாரத்தில் உள்ளவர்களின் ஆதரவு கிடைக்கும். சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள்.  எடுத்த காரியத்தை திறம்பட முடிக்க வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கும் நாள்.

கும்பம் : வாய்ப்புகள் வாயிற்கதவைத் தட்டும் நாள். மனக்குழப்பம் அகலும்.மனதிற்கூ இனியவர்களின் பேச்சால் மனம் மாறும்.சுபகாரியப் பேச்சுகள் முடிவாகின்ற அறிகுறிகள் தோன்றும்.மங்கல ஓசை மனையில் கேட்கும். சிக்கணத்தை அறிந்து சேமிப்பில் அக்கறை காட்டுவீர்கள்.

மீனம் : நிதானத்தோடு செயல்பட்டு பாராட்டை பெறும் நாள். எதிர்பார்த்த காரியமொன்று சற்று தள்ளிப்போகலாம். எதிர்பாராத மாற்றங்கள் உத்தியோகத்தில் ஏற்படலாம். மதியத்திற்கு மேல் பயணங்களால் மகிழ்ச்சி உண்டாகும்.

Recent Posts

தமிழகத்தில் புதன்கிழமை (25/12/2024) இங்கெல்லாம் மின்தடை!

தமிழகத்தில் புதன்கிழமை (25/12/2024) இங்கெல்லாம் மின்தடை!

கோவை : கரையாம்பாளையம், சின்னியம்பாளையம், மைலம்பட்டி, ஆர்.ஜி.புதூர், கைக்கோலம்பாளையம், வெங்கிட்டாபுரம் பல்லடம் : தெற்கு அவினாசிபாளையம், சக்தி நகர், கொடுவாய்,…

46 minutes ago

டங்ஸ்டன் சுரங்கம் விவகாரம் : மறு ஆய்வு செய்ய மத்திய அரசு பரிந்துரை!

டெல்லி : மதுரை மேலூரில் உள்ள நாயக்கர்பட்டி மற்றும் அரிட்டாபட்டி பகுதிகளில், டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும் என…

2 hours ago

இது தெரியாம போச்சே! இலவசமாக யூடியூப் பிரீமியம் வாங்குவது எப்படி தெரியுமா?

சென்னை : இன்றயை காலகட்டத்தில் நாம் அதிகமாக பயன்படுத்தும் சமூக வலைத்தளங்களில் ஒன்றாக யூடியூப் உள்ளது. இதில் பொழுதுபோக்குக்காகவும், சில முக்கிய…

2 hours ago

வாய்ப்பு கொடுத்த கேப்டன்! வெஸ்ட் இண்டீஸை வெளுத்து விமர்சனத்துக்கு பதிலடி கொடுத்த ஹர்லீன் தியோல்!

குஜராத் : இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தற்போது மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 3 டி20 மற்றும்…

3 hours ago

போட்றா வெடிய…  சாம்பியன்ஸ் டிராபி போட்டி அட்டவணை இதோ! IND vs PAK போட்டி எப்போது?

டெல்லி : உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர்களுக்கு இடையே உள்ளஆண்டுகளில் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஐசிசி சாம்பியன்ஸ் டிராபிக்கான…

3 hours ago

ஹூஸ்டன் தமிழாய்வு இருக்கை – மேலும் ரூ.1.50 கோடி ஒதுக்கீடு செய்த தமிழக அரசு!

சென்னை :  அமெரிக்காவின் ஹூஸ்டன் மாநகரத்தில் 1927ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழி, இலக்கியம், பண்பாடு மற்றும்…

4 hours ago