இன்றைய (02.02.2020) நாள் எப்படி இருக்கு!? ராசி பலன்கள் இதோ
மேஷம் : விட்டுக்கொடுப்பதன் மூலமாக உங்களது விருப்பங்கள் நிறைவேறும் நாள்.எதிர்பாராத செலவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.அலைச்சலுக்கேற்ற ஆதாயம் கிடைக்காது. எதிர்பார்த்தவர் உங்களைத் தேடி வந்து உதவி புரியும் நல்லநாள்.
ரிஷபம் : இன்று பொருளாதாரம் உயருகின்ற நாள்.திட்டமிட்ட காரியத்தில் திடீர் மாற்றம் ஏற்படும். ஆரோக்கியத்தில் அக்கரை தேவை. தொழில் ரீதியான பயணம் லாபத்தை தரும். புதிய வாகனங்கள் வாங்க ஆர்வம் ஏற்படும்.
மிதுனம் : நீண்ட நாள் எதிர்பார்த்து கொண்டிருந்த காரியம் நிறைவேறும் நாள்.ஆதாயம் அதிகரிக்கும் அனுபவமிக்க பெரியவர்களின் ஆலோசனையானது தொழில் முன்னேற்றத்திற்கு கைக்கொடுக்கும் விலையுயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
கடகம் : இன்று உங்களின் மதிப்பு மரியாதை பலமடங்கு உயரும் நாள். ஞாபக மறதியால் நின்ற பணிகள் அனைத்தையும் செய்து முடிப்பீர்கள். மாற்றுக்கருத்துடையோர் மனம் மாறுவர். வீடு, இடம் வாங்க வாய்ப்புண்டு. வரவும், செலவும் திருப்தி தரும் வகையில் அமையும்.நீங்கள் மேற்கொள்ளும் பயணங்களால் பலன் கிடைக்கும்.
சிம்மம் : இன்று உங்களிடம் துணிவு மற்றும் தன்னம்பிக்கை அதிகரிக்கும் நாள். கூட்டுத்தொழில் செய்து வந்தவர்கள் இனி தனித்தொழில் ஆக மாற்றலாமா என்கிற சிந்தனையானது மேலோங்கும். பூர்வீக சொத்துகள் பஞ்சாயத்துக்கள் நல்ல முடிவிற்கு வரும். வரவு திருப்திகரமாக இருக்கும்.
கன்னி : இன்று எதைச்செய்தாலும் முன்யோசனை செய்து விட்டு செயல்பட வேண்டிய நாள். ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. பிறருக்கு பொறுப்பு சொல்வதால் பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளது.
துலாம் :இன்று வரன்கள் எல்லாம் வாயில்கதவை தட்டும் நாள். சேமிப்பு படிபடியாக உயரும். பொதுவெளியில் உங்களின் செல்வாக்கு மேலோங்குகின்ற நாள். புதிய ஆடை மற்றும் ஆபரண, பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். எதிர்பாராத வகையில் நினைத்த பணவரவொன்று கைக்கு கிடைக்க வாய்ப்புள்ளது.
விருச்சிகம் :உத்தயோக முயற்சிக்கு வெற்றி கிடைக்கும் நாள்.எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த பாக்கிகள் எல்லாம் வசூலாகும் பணவரவு பலமடங்கு பெருகும் நாள். நல்லவர்கள் தக்கசமயத்தில் உங்களுக்கு கை கொடுத்து உதவ முன்வருவர். ஆரோக்கியத்தில் மாற்று மருத்துவத்தின் காரணமாக உடல்நலம் சீராகும்.
தனுசு: இன்று அறிவால் ஆற்றால் மிகுந்த காரியங்களை அசால்ட்டாக செய்து முடிக்கும் நாள். வெளிவட்டாரத்தில் வரும் தகவல்கள் மகிழ்ச்சியை தரும். வீடு, நிலம் தொடர்பாக முக்கியப் புள்ளிகளைச் சந்தித்து முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். ஏற்பட்டுவந்த பிரச்சினைகள் தற்போது குறையும்
மகரம் : நினைத்த காரியத்தை நிறைவேற்றி நிம்மதி காணும் நாள். அலைபேசி வழியாக அனுகூலமான தகவல் உங்களை நோக்கி வரும். உத்தியோகத்தில் உடன் இருப்பவர்கள் உதவி புரிவர். தாய்வழியில் தனலாபம் கிடைக்கும்.மேலும் பொதுவாழ்வில் உங்களின் புகழ்கூடும்.
கும்பம் : தடைப்பட்டு கொண்டே இருந்த காரியங்கள் எல்லாம் தானாகவே நடைபெறும் நாள் இல்லம் மற்றும் உள்ளம் என்ற இரு இடத்திலும் அமைதி குடிகொள்ளும் நாள். உறவாளர், பகையாளர் என்ற பாரபட்சம் பார்க்காமல் யாருக்கும் உதவி செய்ய முன் வருவீர்கள். அரசியலில் ஈடுபாடு அதிகரிக்கும். சகோதர வழியில் ஏற்பட்ட மனக்கசப்புகள் மாறும்.
மீனம் : இன்று கொடுத்த வாக்கைக் காப்பாற்றி வெற்றி கிடைத்து மகிழுகின்ற நாள். இல்லத்தினர்களின் ஒத்துழைப்பு காரணமாக மேற்கொண்ட பணிகளை சிறப்பாகசெய்து முடிப்பீர்கள். அருகில் உள்ளவர்கள் உங்களை அழைத்து பாராட்டுவார்கள்.எதிர்பாராத வரவு ஒன்று உங்கள் கைக்கு வந்து சேருகின்ற நல்ல நாளாகும்.