மேஷம் :
இன்று உங்களின் பொது வாழ்க்கையில் புகழ் கூடுகின்ற நாள். தங்களின் பொருளாதார நிலையானது உயரும். வாங்கிய கடன் குறைய பல புதிய முயற்சிகளை கையாளுகின்ற நாள். உங்களின் பிள்ளைகளின் எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சியானது வெற்றி பெறும் நல்ல நாள்.
ரிஷபம் :
இன்று உங்களுக்கு மன அமைதி கிடைக்க பக்கத்தில் உள்ளவர்களின் ஆலோசனைகள் கைகொடுக்குகின்ற நல்ல நாள். இன்று அரசியல்வாதிகளால் தங்களுக்கு ஆதாயம் கிடைக்கும். மேலும் வரவு செலவு திருப்தி தரும் விதத்தில் அமையும்.
மிதுனம் :
இன்று உங்களின் வளர்ச்சியில் ஏற்பட்டு கொண்டிருந்த தடைகள் எல்லாம் அகலுகின்ற நாள். மேலும் ஆடம்பரப் பொருட்களை வாங்கி மன மகிழு வாய்ப்பு உள்ளது. உங்களின் உற்றார் உறவினர்கள் வழியில் நீங்கள் எதிர்பார்த்து காத்திருந்த உதவிகள் கிடைக்கும் நல்ல நாள்.
கடகம் :
இன்று உங்களின் உறவினர்களை எல்லாம் அனுசரித்துச் செல்ல வேண்டிய நாள். மேலும் கொடுத்த வாக்கை எப்படியாவது கடைசி நேரத்தில் காப்பாற்றி விடுவீர்கள். குடும்ப முன்னேற்றம் கருதி எடுக்கும் உங்களின் முயற்சிக்கு வெற்றி கிடைக்கும்.தொழில் முன்னேற்றம் காணும் விதத்தில் நடைபெறும்
சிம்மம் :
இன்று உங்களின் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறுகின்ற நல்ல நாள். தங்களின் மனதிற்கு இனிய சம்பவம் உங்களது இல்லத்தில் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. மேலும் நீங்கள் மங்கல நிகழ்ச்சிகளில் எல்லாம் கலந்து கொண்டு மனம் மகிழு வாய்ப்பு ஏற்படும். பயணங்கள் செல்வதில் ஆர்வம் காட்டுவீர்கள்.
கன்னி :
இன்று நீங்கள் யாரை தேடிச் செல்கிறீர்களோ அவர்களே உங்களை நினைப்பர்.மேலும் நீங்கள் எதிர்பார்த்த நண்பர் ஒருவர் உங்களைத் தேடி வரும் வாய்ப்புகள் தென்படுகின்றன. இன்று உங்களுக்கு இடமாற்றம் மற்றும் இலாகா மாற்றம் எல்லாம் நீங்கள் எதிர்பார்த்தபடியே வந்து சேருகின்ற நல்ல நாள்.
துலாம்
இன்று உங்களின் அன்பு நண்பர்களின் ஆதரவு கிடைக்கின்ற நல்ல நாள். தங்களின் அலைச்சலுக்கேற்ற ஆதாயம் இன்று கிடைக்கும். மேலும் உங்களின் உத்தியோக முயற்சி பற்றிய சிந்தனையானது மேலோங்கும். ஏற்கனவே உத்தியோகத்திற்கு விண்ணப்பித்து இருந்தால் அதற்கான வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளது.
விருச்சிகம் :
இன்று உங்களின் விருப்பங்கள் எல்லாம் நிறைவேறுகின்ற நல்ல நாள். மேலும் உங்கள் மனம் மகிழும் வகையில் வி.ஐ. பி.க்களின் சந்திப்பு கிடைக்கும்.இதுவரை கிடைத்த வருமானத்தை விட தற்போது இருமடங்காக வாய்ப்பு உள்ளது . உங்களின் தொழில் தொடர்பாக புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும்.உங்களின் நண்பர்கள் தங்களுக்கு ஒரு நல்ல தகவலைக் கொண்டு வரும் நல்ல நாள்.
தனுசு :
இன்று உங்களை முன்னேற விடாமல் தடுத்து வந்த தடைகள் விலகுகின்ற நல்ல நாள். தனவரவு திருப்தி தருகின்ற வகையில் அமையும். உங்களின் தந்தை வழியில் ஏற்பட்ட மனக்கசப்புகள் மறையும். தொழில் வட்டாரம் விரிவடையும் நல்ல நாள்.
மகரம் :
இன்று நீங்கள் எதை செய்தாலும் அதை யோசித்துச் செயல்பட வேண்டிய நல்ல நாள். இறை வழிபாட்டில் அதிக கவனம் செலுத்துங்கள்.புது முயற்சியில் ஈடுபட வேண்டாம். அன்றாட செய்யும் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துங்கள்.
கும்பம் :
இன்று தங்களை வேண்டாம் என்று பிரிந்து சென்றவர்கள் கூட தங்களை பிரியமுடன் வந்து இணையும் நல்ல நாள். யார் என்று தெரியாதவர்கள் கூட தங்களின் முயற்சி முன்னேற்றத்திற்கு வழி வகுப்பர். உங்களுக்கு ஆடை மற்றும் ஆபரணப் பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள்.
மீனம் :
இன்று உங்களை தேடி அதிர்ஷ்ட வாய்ப்புகள் அலைமோதுகின்ற நல்ல நாள். மேலும் தங்களுக்கு அன்னிய தேச வழியில் இருந்து அனுகூலமான தகவல் உங்களை வந்து சேருகின்ற அற்புதமான நாள்.தங்களின் கனிவான பேச்சால் உங்களது காரியங்களைச் எல்லாம் சாதித்து விடுவீர்கள். வியாபாரத்தில் ஏற்பட்ட விரோதங்கள் எல்லாம் விலகுகின்ற நல்ல நாள்.
சென்னை: நாளை (டிச.05) தாம்பரம் ரயில் நிலையத்தில் பயணிகளுக்கான புதிய நடை மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெறுவதால், காலை 7…
சென்னை: அமலாக்கத்துறை சோதனையில் எந்த ஆவணமும் பறிமுதல் செய்யப்படவில்லை என அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார். வேலூர் மாவட்டம் காட்பாடியில் காந்திநகர்…
சென்னை: அண்ணா பல்கலை. மாணவி விவகாரத்தில் இப்போது தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில், சிறப்பு புலனாய்வுக் குழு அதிகாரிகள்…
சென்னை: இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் உருவாகியுள்ள பிசாசு 2 திரைப்படம் எப்போது தான் வெளியாகும் என 2 ஆண்டுகளுக்கு மேல்…
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் கோட்டையூர் கிராமத்தில் செயல்பட்டுவந்த தனியார் பட்டாசு ஆலையில் இன்று காலையில் மருந்து கலக்கும் அறையில் எதிர்பாராதவிதமாக…
நார்வே: உலகின் நம்பர்.1 செஸ் வீரரும் ஐந்து முறை உலக சாம்பியனுமான மேக்னஸ் கார்ல்சன் தனது காதலியான 26 வயதான…