இன்றைய (04.12.2019) நாள் எப்படி இருக்கு!? ராசி பலன்கள் இதோ..!
மேஷம் :
இன்றைய நாளில் உங்களுக்கு வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். தொழில் ரீதியாக இருந்த போட்டிகள் விலகும் நாள் ஆகும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் சுமூகமாக முடியும்.
ரிஷபம் :
இன்றைய நாளில் உங்களுக்கு ஆரோக்கியம் சீராக அமையும். பெரிய மனிதர்களின் நட்பு மனதிற்கு தெம்பை கொடுக்கும். நண்பர்களின் மூலமாக எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். ஆன்மீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும் நாள் ஆகும்.
மிதுனம் :
இன்றைய நாளில் உங்களுக்கு பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். சிலருக்கு தெய்வ தரிசனத்திற்காக தூர பயணம் செல்லும் வாய்ப்பு அமையும். பணியில் உள்ளவர்களுக்கு வேலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
கடகம் :
இன்றைய நாளில் நீங்கள் செய்யும் செயல்களில் தாமதம் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் சிறு உபாதைகள் ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் நிதானம் தேவை.
சிம்மம் :
இன்றைய நாளில் உங்கள் குடும்பத்தில் உள்ளவர்கள் ஒற்றுமையாக இருப்பார்கள். உறவினர்கள் வழியாக மகிழ்ச்சி தரும் செய்திகள் வரும். நீங்கள் எதிர்பார்த்த உதவிகள் இன்று கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும். பொன் பொருள் சேரும் நாள் ஆகும்.
கன்னி :
இன்றைய நாளில் உங்களுக்கு குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். இதுவரை வராத பழைய பாக்கிகள் வசூலாகும். பணியில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். நண்பர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் நற்பலன் கிட்டும். பணவரவு சிறப்பாக இருக்கும் நாள் ஆகும்.
துலாம் :
இன்றைய நாளில் உங்களுக்கு வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சினைகள் ஏற்படும். தேவையற்ற செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்க நேரிடும்.பணியில் அதிகாரிகளின் கெடுபிடிகள் அதிகரித்தாலும் உடனிருப்பவர்கள் ஒத்துழைப்பு தருவார்கள். உடன் பிறந்தவர்கள் உதவிக்கரம் நீட்டுவர்.
விருச்சிகம் :
இன்றைய நாளில் உங்களுக்கு வரவை காட்டிலும் செலவுகள் அதிகமாகும். வியாபாரத்தில் எதிர்பாராத பிரச்சினைகள் ஏற்படும். உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும் நாள் ஆகும்.
தனுசு :
இன்றைய நாளில் உங்களுக்கு அதிகாலையிலே ஆனந்தமான செய்தி வந்து சேரும். திருமண சுப முயற்சிகளில் அனுகூலப் பலன்கள் உண்டாகும்.வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை வாய்ப்பு அமையும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும் நாள் ஆகும்.
மகரம் :
இன்றைய நாளில் உங்களுக்கு உறவினர்களிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். பணியில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கப்பெற்று குடும்பத்தோடு சேர்ந்து மகிழ்வீர்கள். பிள்ளைகளால் செலவுகள் ஏற்பட்டாலும் சுப செய்தி கிடைக்கும் நாள் ஆகும்.
கும்பம் :
இன்றைய நாளில் உங்களுக்கு வியாபாரம் சிறப்பாக நடைபெறும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்கும் முயற்சிகள் வெற்றியை தரும். குடும்பத்தில் பெற்றோரின் அன்பை பெறுவீர்கள்.பணியில் உடன் பணிபுரிபவர்களால் அனுகூலங்கள் உண்டாகும் நாள் ஆகும்.
மீனம் :
இன்றைய நாளில் உங்களுக்கு பொருளாதார நிலை சுமாராக இருக்கும். பெற்றோருடன் மனஸ்தாபம் உண்டாகும். குடும்பத்தில் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்த்தால் ஒற்றுமையாக இருக்கலாம். வேலையில் மேலதிகாரிகளை அனுசரித்து நடந்து கொள்வதன் மூலம் அனுகூலப்பலனை அடைய முடியும் நாள் ஆகும்.