இன்றைய நாள் (31.05.2020) உங்களுக்கு எப்படி இருக்கும்? இதோ உங்களுக்கான ராசி பலன்கள்!
உங்களுக்கான இன்றைய ராசி பலன்கள் இதோ…
மேஷம் : இன்று நீங்கள் உற்சாகமாக இருக்கும் நாள். வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். நீங்கள் எடுக்கும் முடிவுகள் மகிழ்ச்சி அளிக்கும்.
ரிஷபம் : உங்களது புத்திசாலித்தனத்தால் இன்றைய நாள் உங்களுக்கானதாகும். உங்கள் அணுகுமுறையில் யதார்த்தம் தேவை. முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டாம். இன்று பொறுமையுடன் செயல்படவேண்டியது அவசியம்.
மிதுனம் : புத்திசாலித்தனத்தை பயன்படுத்தி இன்றைய பணிகளை குறித்த நேரத்தில் முடித்துவிடுவீர்கள். நம்பிக்கையுடன் இன்றைய நாளை கடந்து செல்லுங்கள். வெற்றி கிட்டும் நாள்.
கடகம் : இன்றைய நாள் உங்களுக்கு சிறப்பானதாக இருக்கும். இன்று உற்சாகமாக இருப்பீர்கள். செயல்களில் வெற்றி கிடைக்கும். இன்றைய நாள் மகிழ்ச்சியாக இருக்கும்.
சிம்மம் : பொறுமையாக இருக்க வேண்டிய நாள். பிறருடன் கவனமாக யோசித்து பேச வேண்டும். இயன்றளவு தேவையற்ற இடங்களில் பேசுவதை தவிர்க்கவும். முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டாம்.
கன்னி : இன்று உங்கள் செயல்களில் தடைகள் காணப்படும். தன்நம்பிக்கையோடு இன்றைய பிரச்சினைகளை எதிர்கொள்ளுங்கள். எதனையும் எதிர்கொள்ளும் நம்பிக்கை இன்று கிடைக்கும். மனகட்டுப்பாட்டுடன் இருந்தால் சிறந்த பலன்கள் கிடைக்கும்.
துலாம் : திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். பிறருக்கு உதவுவது மனஆறுதலை தரும். ஆன்மீகத்தில் ஈடுபடுவதால் ,மனஆறுதல் கிடைக்கும்.
விருச்சிகம் : அதிர்ஷ்டமுள்ள நாள். இன்று காணப்படும் தடைகளை எளிதில் சமாளிப்பீர்கள். அனுசரித்து நடந்தால் அனைத்தும் சிறப்பாக அமையும்.
தனுசு :இன்றைய நாள் உங்களுக்கு சீராக இருக்கும். நேர்மறை எண்ணம் அதிகமாக காணப்படும். அதன்காரணமாக இன்று வெற்றி எளிதில் கிடைக்கும்.
மகரம் : எதிர்மறை எண்ணங்களை தவிர்த்திடுங்கள். ஆன்மீகத்தில் ஈடுபடுவது பயனுள்ளதாக அமையும். எதிர்காலத்தை நினைத்து கவலை கொள்ள வேண்டாம். எதிர்காலத்திற்கான திட்டமிடலை இன்றே தொடங்குங்கள்.
கும்பம் : நீங்கள் நேர்மறை எண்ணங்கள் கொண்டு இன்றைய சவால்களை எதிர்கொள்ள வேண்டும். உங்களின் சுயமுயற்சி இன்றைய நாளை பிரகாசமாக்கும். மனதில் எழும் எதிர்மறை எண்ணங்களை தவிர்த்திடுங்கள்.
மீனம் : இன்றைய நாள் மிகவும் வெற்றிகரமாக இருக்கும். உங்களிடம் இருக்கும் ஆற்றல் உங்களை வெற்றி பாதைக்கு கூட்டி செல்லும். தெளிவான எண்ணங்கள் இன்று இருக்கும். அதன் காரணமாக அனைத்தும் உங்களுக்கு சாதகமாகவ நடக்கும்.