இன்றைய நாள் (30.08.2020) எப்படி இருக்கும்? இதோ உங்களுக்கான ராசி பலன்கள்.!

Default Image

உங்களுக்கான இன்றைய ராசி பலன்கள் இதோ…

மேஷம் : இன்று உங்களுக்கு சாதகமான நாள். நம்பிக்கை உணர்வு அதிகமாக இருக்கும். இனிமையான வார்த்தைகள் மூலம் பிறரை கவர்வீர்கள்.

ரிஷபம் : இன்று நீங்கள் நம்பிக்கையுடன் காணப்படுவீர்கள். மன உறுதியுடன் இருப்பதால் இன்றைய சவால்களை வெற்றியுடன் எதிர்கொள்வீர்கள்.

மிதுனம் : உங்கள் பொறுமையை சோதிக்கும் நாளாக இன்று அமையும். அதிகமாக உணர்ச்சிவசப்படுவீர்கள். அமைதியாக நடந்து கொள்ள வேண்டும். இலக்குகளை அடைய கடினமாக போராட வேண்டும்.

கடகம் : இன்றைய நாள் உங்களுக்கு சாதகமாக அமையும். நல்ல பலன்கள் கிடைக்கும் நாள். தொடர் முயற்சி மூலம் வெற்றிகள் சாத்தியமாகும்.

சிம்மம் : இன்று நீங்கள் பரிசோதனை முயற்சி செய்வீர்கள். ஆன்மீகத்தில் ஈடுபடுவது உங்களுக்கு மன ஆறுதலை தரும். ஆன்மிக பயணங்கள் உங்களுக்கு பயனளிக்கும்.

கன்னி : நீங்கள் வருத்தப்படும் வகையில் சூழ்நிலை அமையும். எதிர்பார்த்த பலன்கள் கிடைக்காது. எளிதான அணுகுமுறை சாதகமான பலன்களை பெற்றுத்தரும்.

துலாம் : உங்கள் முயற்சியில் பொறுமையும் மனவுறுதியும் தேவை. உணர்ச்சிவசப்படாமல் செயல்பட்டால் வெற்றி கிடைக்கும். பணிகளை திட்டமிட்டு செய்ய வேண்டும்.

விருச்சிகம் : உங்களின் சுய முயற்சிக்கு ஏற்ற நாள். மன உறுதி மூலம் உங்கள் விருப்பங்கள் நிறைவேறும். முயற்சிகள் நல்ல பலனை தரும்.

தனுசு :  இன்று நீங்கள் சீரான அணுகுமுறையை மேற்கொள்ள வேண்டும். உணர்ச்சிவசப்படுவதலை தவிர்க்கவேண்டும். எதிர்மறை எண்ணங்களை தவிர்த்திட வேண்டும்.

மகரம் : இன்று சவாலான சூழ்நிலை காணப்படும். திட்டமிட்டு செயல்பட்டால் நல்ல பலன் கிடைக்கும். பிரார்த்தனை செய்வதால் நல்ல பலன் கிடைக்கும்.

கும்பம் : இன்றைய நாள் பயனுள்ளதாக அமையாது. உங்கள் முயற்சிகள் வெற்றியை தராது. நீங்கள் அமைதியாகவும் நட்பான அணுகுமுறையுடன் இருக்க வேண்டும். ஆன்மீக ஈடுபாடு மன ஆறுதலை பெற்றுத்தரும்.

மீனம் : உங்களை மேம்படுத்திக்கொள்ள இன்றைய நாளை நீங்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். இனிமையான தொடர்புகள் மூலம் சாதகமான பலன்கள் கிடைக்கும். இன்றைய நாள் சிறப்பானதாக அமையும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்