இன்றைய நாள் (26.04.2020) உங்களுக்கு எப்படி இருக்கும் ? இதோ உங்களுக்கான ராசி பலன்கள்
உங்களுக்கான இன்றைய ராசி பலன்கள் இதோ…
மேஷம் : உங்களுக்கு சௌகரியங்களை இழக்க நேரிடும். முக்கியமான முடிவுகள் எடுக்க வேண்டாம். திட்டமிட்டு செயலாற்றினால் நல்ல விளைவுகள் கிடைக்கும்.
ரிஷபம் : திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். பொறுமை இழக்கும் சூழல் காணப்படும். அமைதியாக செயல்பட வேண்டும்.
மிதுனம் : இன்று கவலை காணப்படும் நாள். பிரார்த்தனை மன ஆறுதலை தரும். அமைதியான அணுகுமுறையை மேற்கொள்ளவேண்டும்.
கடகம் : இன்று மகிழ்ச்சியான நாள். உங்களிடம் மனஉறுதி காணப்படும். அது உங்களுக்கு வெற்றியை தேடிதரும். மனதில் நம்பிக்கை அதிகமாக இருக்கும். விரைந்து முடிவெடுப்பீர்கள்.
சிம்மம் : புதிய வாய்ப்புகள் அதிகமாக உங்களை தேடிவரும். நம்பிக்கையுடன் செயல்பட்டால் நல்ல பலன்கள் கிடைக்கும். திருப்திகாரமான நாள்.
கன்னி : வாழக்கை குறித்த கவலை இன்று உங்களுக்கு எழும். தடைகளை கடப்பது கடினமாக இருக்கும். எச்சரிக்கையாக செயல்பட வேண்டும்.
துலாம் : உங்களுக்கு சாதகமான நாள் இன்று அல்ல. கவனமுடன் செயல்களை செய்ய வேண்டும். சிந்தித்து பேச வேண்டும். பிரார்த்தனைகள் மூலம் மனஆறதல் அளிக்கும்.
விருச்சிகம் : இன்று நல்ல பலன்கள் உண்டாகும். முயற்சி திருவினையாக்கும். அது நல்ல பலன்களை தரும். நண்பர்களின் ஆதரவு கிடைக்கும்.
தனுசு : கடினமான முயற்சிகள் இன்றைய நாளை உங்களுத்தாக்கும். உங்கள் திறமைகளை வளர்த்துக்கொள்ள இன்றைய நாளை பயன்படுத்தி கொள்ளுங்கள்.
மகரம் : லட்சியத்தை அடைய கடினமான முயற்சி செய்ய வேண்டும். நம்பிக்கை வைத்தால் நல்ல விளைவுகள் உண்டாகும்.
கும்பம் : குடும்பத்தில் பிரச்சினைகள் எழும் அதனை சமாளிக்க வேண்டிய சூழல் வரும். பெரியவர்களின் ஆலோசனைப்படி நடந்தால் நல்லது நடக்கும்.
மீனம் : அதிர்ஷ்டமான நாள். கடினமான பணிகளை எளிதில் முடிப்பீர்கள். முக்கியமான முடிவுகள் எடுக்க உகந்த நாள்.