இன்றைய நாள் (25.04.2020) உங்களுக்கு எப்படி இருக்கும் ? இதோ உங்களுக்கான ராசி பலன்கள்
இன்றைய ராசி பலன்கள் இதோ உங்களுக்காக…
மேஷம் : இன்று தைரியம் குறைவாக உணர்வீர்கள். நம்பிக்கையுடன் செயல்படுங்கள் வெற்றி உங்களுக்கு தான்.
ரிஷபம் : மனஉறுதியுடனும் கவனமாகவும் செயலாற்ற வேண்டும். இன்று முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டாம். ஆன்மீகத்தில் ஈடுபட்டால் ஆறுதல் கிடைக்கும்.
மிதுனம் : இன்று நீங்கள் முன்னேறுவதற்கு ஏற்ற நாள். உங்கள் திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும் நாள்.
கடகம் : முக்கிய முடிவுகள் எடுக்க ஏற்ற நாள். உடன் பிறந்தவர்களின் ஆதரவு கிட்டும் நாள்.
சிம்மம் : இன்று நடைமுறைக்கு ஏற்ற செயல்பாடுகளில் ஈடுபடுத்தி கொள்ளுங்கள். திட்டமிட்டு வெற்றிகளை குவித்திடுங்கள்.
கன்னி : முன்னேற்றம் இல்லாத நாள். உணர்ச்சிவசப்படக்கூடிய நாள். எதையும் எளிதாக எடுத்துக்கொள்ளுங்கள். பிரார்த்தனை செய்யுங்கள்.
துலாம் : இன்று நம்பிக்கையுள்ள நாள். முக்கியமான முடிவுகளை எடுக்க உகந்த நாள்.
விருச்சிகம் : இலட்சியங்கள் நிறைவேறும் நாள். மகிழ்ச்சிகரமான தருணங்கள் அதிகமாக கிடைக்கும். முக்கியமான முடிவுகளை நீங்கள் எடுக்கலாம்.
தனுசு : தடைகளை தாண்டி வெற்றி கிடைக்கும் நாள். யோகா செய்வதால் கவலைகள் நீங்கும். மனதை அமைதியுடன் வைத்து கொள்ளுங்கள்.
மகரம் : இன்றைய நாள் உங்களுக்கு சாதகமாக அமையாது. இன்று சவால்களை சந்திக்க வேண்டியிருக்கும். குடும்பப் பிரச்சினைகள் கவலையை அளிக்கும். பிரார்த்தனைகள் மன ஆறுதலை தரும்.
கும்பம் : நட்பு வட்டாரத்தின் ஆதரவு கிடைக்கும். உங்கள் நேரத்தை உபயோகமாக கழிப்பதன் மூலம் உங்கள் இலட்சியங்களை அடையும் வாய்ப்பு கிடைக்கும்.
மீனம் : நீங்கள் பாதுகாப்பின்மையை உணர்வீர்கள். சில அசௌகரியமான சூழல் உருவாகும்.