இன்றைய நாள் (25.08.2020) எப்படி இருக்கும்? இதோ உங்களுக்கான ராசி பலன்கள்.!

Default Image

உங்களுக்கான இன்றைய ராசி பலன்கள் இதோ…

மேஷம் : இன்றைய நாள் உங்களுக்கு ஆக்கப்பூர்வமாக அமையும். நீங்கள் புத்துணர்ச்சியுடனும் மன உறுதியுடனும் காணப்படுவீர்கள். இன்றைய சூழல் உங்களுக்கு சாதகமான பலன்களை தரும்.

ரிஷபம் : இன்றைய நாள் உங்களுக்கு மகிழ்ச்சி தரும் நாளாக அமையும். உங்கள் கனவுகள் நிறைவேறும். நல்ல செய்தி கிடைக்கும்.

மிதுனம் : இன்று உங்கள் அணுகுமுறையில் பொறுமையும் மனவுறுதியும் தேவை. வேகத்தை தவிர்த்திட வேண்டும். சிறப்பாக திட்டமிட்டால் நல்ல பலன்களை பெறலாம்.

கடகம் : இன்று உங்கள் செயலில் நம்பிக்கையும் மன உறுதியும் தேவை. நீங்கள் உங்களை உற்சாகப்படுத்தி கொள்ள வேண்டும். எதிர்மறை எண்ணங்களை தவிர்த்து நேர்மறை எண்ணங்களை வளர்த்து கொள்ளுங்கள்.

சிம்மம் : உங்கள் புத்திசாலித்தனத்தை வளர்த்து கொள்ள வேண்டிய நாள். அனுபவம் உங்களுக்கு நல்ல பாடங்களை கற்றுக்கொடுக்கும். அது உங்களை வெற்றியாளராக மாற்றும்.

கன்னி : திட்டமிட்டு கவனமுடன் செயல்பட்டால் உங்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். இறைவழிபாடு முக்கியம்.

துலாம் : உங்கள் தைரியமும் மன உறுதியும் வெற்றியை தேடித்தரும். நம்பிக்கையுடன் செயல்படுங்கள். அமைதியாக இருங்கள். இசை கேட்டு மகிழுங்கள்.

விருச்சிகம் : இன்றைய நாள் உங்களுக்கு பலனளிக்காது. தேவையான பலன்கள் தாமதமாக கிடைக்கப்பெறும். உங்கள் முயற்சி உங்கள் முன்னேற்றத்திற்கு உதவியாக இருக்கும்.

தனுசு : உங்கள் ஆற்றல் அதிகமாக காணப்படும். கடினமான பணிகளை கூட இன்று எளிதாக முடிப்பீர்கள்.

மகரம் : உங்கள் வருங்காலத்திற்கான திட்டங்களை அமைப்பது அவசியம். இன்று உங்களுக்காக பணம் சம்பாதிப்பீர்கள். இன்றைய சம்பவங்கள் உங்களுக்கு சாதகமாக அமையும்.

கும்பம் : இன்று நீங்கள் பொறுமையாக இருக்க வேண்டிய நாள். மகிழ்ச்சி கிடைக்கும் நாள். தேவையற்ற ஏமாற்றங்களை தவிர்த்திடுங்கள்.

மீனம் : இன்று நீங்கள் கவனமாகவும் சாமர்த்தியமாகவும் செயல்களை செய்யவேண்டும். சிறு கவனச்சிதறல் கூட பெரிய தவறுகளுக்கு வழிவகுக்கலாம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்