இன்றைய நாள் (24.06.2020) உங்களுக்கு எப்படி இருக்கும்? இதோ உங்களுக்கான ராசி பலன்கள்!
உங்களுக்கான இன்றைய ராசி பலன்கள் இதோ…
மேஷம் : இன்று எதனையும் எளிதாக எடுத்துக்கொள்ள வேண்டும். அதன்மூலம் சிறந்த பலன்கள் கிடைக்கும். நகைச்சுவை உணர்வுடன் இருக்க வேண்டும். வார்த்தைகளில் கவனம் தேவை.
ரிஷபம் : இன்று உங்களுக்கு சாதகமான நாள். நல்ல பலன்கள் கிடைக்கும். முக்கிய முடிவுகளை எடுக்கலாம். உங்கள் பேச்சின் மூலம் மற்றவர்களை கவர்வீர்கள்.
மிதுனம் : இன்றைய நாள் உங்களுக்கு மகிழ்ச்சியாக அமையாது. எதனையும் எதிர்பார்க்க கூடாது. இன்று உங்களுக்கான வளர்ச்சி மற்றும் பலன்கள் பெருகி காணப்படாது.
கடகம் : இன்று நீங்கள் அமைதியாகவும் கட்டுப்பாடுடனும் இருக்க வேண்டியது அவசியம். ஆன்மீக பாடல்கள் கேட்பது ஆன்மீகத்தில் ஈடுபடுவது உங்களுக்கு நல்லதாக அமையும்.
சிம்மம் : இன்று நீங்கள் இலக்குகளை அடைய புத்திசாலித்தனத்துடன் செயல்பட வேண்டும். உணர்ச்சிவசப்படுதலை கட்டுப்படுத்த வேண்டும். அமைதியாக இருக்க வேண்டும்.
கன்னி : இன்று உங்களுக்கு சாதகமான நாள். நம்பிக்கையுடன் இருக்கவேண்டும். உங்கள் விருப்பங்கள் நிறைவேறும் நாள். நட்பு வட்டாரம் பெருகும் நாள்.
துலாம் : இன்று உங்கள் எண்ணம் பரந்த நோக்குடன் இருக்கும். உங்கள் இலட்சியம் எளிதில் நிறைவேறும். உங்களது நேர்மறையான அணுகுமுறை நல்ல வெற்றியை தேடித்தரும். ஆன்மீகத்தில் ஈடுபடுவது நல்லது.
விருச்சிகம் : இன்றைய நாள் உங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்காது. அதிகமாக சிந்திப்பீர்கள். அதனால் அதனை தவிர்த்திடுங்கள். நல்ல அனுபவங்கள் கிடைக்கும் நாள்.
தனுசு : இன்று உங்களுக்கு தேவையான பலன்கள் கிடைக்காது. திட்டமிட்டு செயல்பட்டால் வெற்றி கிடைக்கும். நீங்கள் பொறுமையை இழக்கும் சூழல் உருவாகலாம்.
மகரம் : இன்று உங்களுக்கு தேவையான பலன்கள் கிடைக்கும். மகிழ்ச்சியுடனும் உற்சாகத்துடனும் இன்று இருப்பீர்கள். விழிப்புணர்வுடன் செயல்படுவீர்கள்.
கும்பம் : இன்றைய நாள் உங்களுக்கு சாதகமாக அமையும். இன்று செயல்கள் சுமுகமாக நடைபெறும். புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். மங்களகரமான நாள்.
மீனம் : இன்று நீங்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். கடினமான சூழ்நிலைகளை கையாள முடியும். அதிகமாக சிந்திப்பதை தவிர்க்க வேண்டும். தெளிவாக இருக்க வேண்டும்