இன்றைய (27.12.2019) நாள் எப்படி இருக்கு!? ராசி பலன்கள் இதோ…

Default Image

மேஷம் : இன்று மந்தமான நாளாக இருக்கும். ஆன்மீகத்தில் ஈடுபடுவது மன நிம்மதியையும் மன ஆறுதலையும் தரும்.

ரிஷபம் : இன்று நீங்கள் சரியான  பாதையை தேர்ந்தெடுக்க வேண்டும். பயத்தை ஓரங்கட்டி நம்பிக்கையுடன் செயல்படுங்கள்.

மிதுனம் : நீங்கள் சிந்தித்து தேர்ந்தெடுத்த பாதையில் செல்வீர்கள். உங்கள் லட்சியத்தை அடைய நீங்களே உங்களை தயார்படுத்தி கொள்வீர்கள்.

கடகம் : இன்று பணவரவு உள்ள நாள். திட்டமிட்டு செயல்படுங்கள். எதிர்கால திட்டங்களை இன்று வகுத்து கொள்ளுங்கள்.

சிம்மம் : இன்று நீங்கள் மீதம் வைத்துள்ள உங்களது பணிகளை விரைவில் முடிப்பதற்கு முயற்சி செய்யுங்கள். இன்று கொஞ்சம் கடினமான நாளாக இருக்கும்.

கன்னி : இன்று முன்னேற்றத்துக்கான நாள் அல்ல. உங்கள் செயல்பாட்டில் கவனம் தேவை.

துலாம் : இன்று உங்களுக்கு இனிமையான தருணங்கள் காத்திருக்கின்றன. பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளுங்கள். அது உங்கள் மன சோர்வை நீக்கி பதட்டத்தில் இருந்து விடுபட வைக்கும்.

விருச்சிகம் : இன்றைய நாள் மிகவும் நல்ல நாள். அதிக உற்சாகத்துடனும் ஆற்றலுடனும் காணப்படுவீர்கள்.

தனுசு : புத்திசாலித்தனமும் நல்ல அணுகுமுறையும் உங்கள் வெற்றிக்கு வழிகாட்டும். மிகவும் உபயோகமாக இன்றைய நாளை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

மகரம் : உற்சாகத்துடனும் ஆற்றலுடன் இருப்பது உங்களுக்கு நல்ல பலனை தரும். எதிர்பார்த்து எந்த செயலையும் செய்யாதீர்கள். உங்கள் உழைப்பிற்கு கண்டிப்பாக பலன் கிடைக்கும்.

கும்பம் : உங்கள் விருப்பங்கள் நிறைவேறும் நாள். முக்கிய முடிவுகளை இன்று நீங்கள் எடுக்கலாம்.

மீனம் : இன்றைய நாள் சிறப்பாக இருக்கும். உங்களுக்கு பயன் தரக்கூடிய முடிவுகளை இன்று நீங்கள் எடுப்பீர்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்