உங்களுக்கான இன்றைய ராசி பலன்கள்…
மேஷம் : உங்களது தினசரி செயல்களை செய்வது இன்று கடினமாக இருக்கும். முக்கிய முடிவுகளை தவிர்ப்பது நல்லது. அமைதியாக இருக்க வேண்டிய நாள்.
ரிஷபம் : உங்கள் புத்திசாலித்தனத்தின் மீது நீங்கள் நம்பிக்கை வைத்துக் கொள்ள வேண்டும். இன்று நீங்கள் நேர்மறையான எண்ணத்துடன் இருக்க வேண்டும்.
மிதுனம் : இன்று நீங்கள் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும். இன்று நடப்பவை உங்களுக்கு சாதகமாக அமைய நீங்கள் முயற்சி செய்ய வேண்டும்.
கடகம் : இன்று நீங்கள் பொறுமையை கடைபிடிக்க வேண்டும். உங்கள் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த வேண்டும். தியானம் அல்லது யோகா செய்வது உங்களுக்கு மன ஆறுதலை தரும்.
சிம்மம் : இன்று மனதில் குழப்பங்கள் ஏற்படும். நீங்கள் அஜாக்கிரதையாக இருப்பீர்கள். அதனால் விலை மதிப்பு மிக்க பொருட்களை இழக்கும் சூழல் உண்டாகும். கவனமாக இருக்க வேண்டிய நாள்.
கன்னி : ஆன்மீகத்தில் ஈடுபடுவது இன்று உங்களுக்கு மகிழ்ச்சியை தரும். இன்றைய அனுபவம் உங்களுக்கு நல்ல பாடத்தை கற்று தரும்.
துலாம் : இன்று சுறுசுறுப்பாக செயல்பட்டு உங்கள் பொறுப்புகளை விரைந்து முடிப்பீர்கள். உங்கள் கனவுகள் நனவாகும் நாள். நேர்மறையான எண்ணங்களால் இன்றைய இலக்குகளை எளிதில் அடைவீர்கள்.
விருச்சிகம் : நீங்கள் உங்கள் மீது நம்பிக்கை வைத்து கொள்ள வேண்டிய நாள். அதன்மூலம் உங்கள் திறமைகள் மேம்படுத்தப்படும். உங்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும்.
தனுசு : திட்டமிட்டு செயல்பட வேண்டும். இல்லையென்றால் ஏமாற்றங்களை சந்திப்பீர்கள். பொறுமையாகவும் அதேசமயம் சற்று புத்திசாலித்தனத்துடனும் செயல்பட வேண்டும். முக்கியமான முடிவுகளை எடுக்க வேண்டாம்.
மகரம் : உங்களுக்கு நல்லது நடக்கும் நாள். முக்கிய முடிவுகளை இன்று எடுக்கலாம். மனத்திருப்தியுடன் காணப்படுவீர்கள்.
கும்பம் : நீங்கள் நம்பிக்கையுடன் இருப்பீர்கள். உங்களின் தன்னம்பிக்கை மூலம் கடினமான பணிகள் கூட எளிதாக முடியும்.
மீனம் : தியானம் செய்வதன் மூலம் மனம் அமைதிபெறும். எதிர்மறையான எண்ணங்களை தவிர்க்க வேண்டும். திட்டமிட்டு செயல்பட்டால் இன்று உங்களுக்கு சாதகமான பலன்கள் அமையும்.
மன்பிஜ் : சிரியாவின் மன்பிஜ் நகரில் நேற்று மதியம் வெடிகுண்டு நிரப்பப்பட்டிருந்த கார் வெடித்து சிதறியதில், அதன் அருகே இருந்த…
ஈரோடு : ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலுக்கான பரப்புரை நேற்று மாலை 6 மணியோடு நிறைவு பெற்றது. அரசியல் கட்சியினர்…
மகாராஷ்டிரா : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20…
சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தந்தை பெரியார் குறித்து தொடர்ச்சியாக விமர்சித்து பேசி வருகிறார். இதன் காரணமாக…
சென்னை : இன்று நடிகர் சிம்புவின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் நடிக்கும் படங்களின் அப்டேட்டுகள் தொடர்ச்சியாக வெளியாகி கொண்டு இருக்கிறது.…
துபாய் : ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025-க்கான கிரிக்கெட் போட்டிகள் வரும் பிப்ரவரி 19 முதல் தொடங்கி மார்ச் 9ஆம்…