இன்றைய நாள் (20.08.2020) எப்படி இருக்கும்? இதோ உங்களுக்கான ராசி பலன்கள்.!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
உங்களுக்கான இன்றைய ராசி பலன்கள் இதோ…
மேஷம் : இன்று அமைதி இழந்து பாதுகாப்பு இல்லாதது போல உணர்வீர்கள். தன்னம்பிக்கை குறைந்து காணப்படும். வெற்றிபெற உற்சாகமாக செயல்பட வேண்டும்.
ரிஷபம் : நன்றும் தீதும் கலந்து காணப்படும். நிச்சயமற்ற நிலை இருக்கும். பொறுமையுடன் இருந்தால் வெற்றி நிச்சயம்.
மிதுனம் : பணிகள் அதிகமாக இருக்கும். உங்கள் இலக்குகளை அடைகின்ற முக்கிய முடிவுகளை எடுக்க ஏற்ற நாள்.
கடகம் : உங்கள் இலக்குகளை அடைய கடுமையாக போராட வேண்டியிருக்கும். நம்பிக்கையுடன் திட்டமிட்டு செயல்படவேண்டும். உங்கள் விருப்பங்கள் நிறைவேறும்.
சிம்மம் : நீங்கள் பொறுமை இழந்து காணப்படுவீர்கள். அது உங்கள் வளர்ச்சியை பாதிக்கும். பெரியோர்களின் ஆலோசனையை கேட்டு நடந்து கொள்வது நல்ல பலனை தரும்.
கன்னி : நீங்கள் அமைதி இழந்து உணர்ச்சிவசத்துடன் காணப்படுவீர்கள். இன்று சமநிலையோடு இருக்கவேண்டும். ஆன்மீகத்தில் ஈடுபடுவது உங்களுக்கு ஆறுதலை தரும்.
துலாம் : கடுமையாக முயற்சித்தால் சிறப்பான பலன்கள் கிடைக்கும். அதிர்ஷ்டமான நாள். விரைந்து முடிவெடுப்பீர்கள். இன்றைய நாள் மகிழ்ச்சிகரமாக அமையும்.
விருச்சிகம் : உங்கள் இலட்சியங்களை அடைய இன்று ஏற்ற நாள். மகிழ்ச்சியான தருணங்கள் காணப்படும். முக்கிய முடிவுகள் நல்ல பலனை தரும்.
தனுசு : இன்று சுமாரான பலன்களே கிடைக்கும். நீங்கள் கடினமான சூழ்நிலையை சமாளிக்க ஆற்றலை வளர்த்து கொள்ள வேண்டும். ஆன்மீகத்தில் ஈடுபடுவது மன ஆறுதலை தரும்.
மகரம் : இன்று பதட்டமான சூழ்நிலை காணப்படும். பொறுமையாகவும் மன உறுதியுடனும் செயல்படவேண்டும். அமைதியான அணுகுமுறையுடன் கையாள வேண்டும்.
கும்பம் : முன்னேறுவதற்கு ஏற்ற பலன்கள் கிடைக்கும். இன்று எடுக்கும் முக்கிய முடிவுகள் நல்ல பலனை கொடுக்கும்.
மீனம் : உங்கள் லட்சியங்களை அடைவதற்கு இன்று ஏற்ற நாள். எச்சரிக்கையுடனும் விவேகத்துடனும் செயல்பட வேண்டும். புத்திசாலித்தனத்துடன் செயல்படுவது நல்ல பலனை தரும்.
லேட்டஸ்ட் செய்திகள்
“செங்கோட்டையன் விசுவாசமானவர்.. இதை செய்தால் தான் அதிமுகவுக்கு வாழ்வு” – ஓ.பன்னீர்செல்வம்.!
February 13, 2025![ops -sengottaiyen](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/ops-sengottaiyen.webp)
விரைவில் எம்பி-யாகும் கமல்ஹாசன்? துணை முதல்வருடன் ‘திடீர்’ சந்திப்பு!
February 13, 2025![udhayanidhi stalin and kamal haasan](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/udhayanidhi-stalin-and-kamal-haasan.webp)
இந்தியாவுக்கு சவால் விட்ட இங்கிலாந்து வீரர்..”இப்படியெல்லாம் பேசக்கூடாது”..கெவின் பீட்டர்சன் பதிலடி!
February 13, 2025![ben duckett Kevin Pietersen](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/ben-duckett-Kevin-Pietersen.webp)