இன்றைய நாள் (17.08.2020) எப்படி இருக்கும்? இதோ உங்களுக்கான ராசி பலன்கள்.!
உங்களுக்கான இன்றைய ராசி பலன்கள் இதோ…
மேஷம் : இன்றைய நாள் உங்களுக்கு ஆக்கபூர்வமாக அமையும். நீங்கள் மன உறுதியுடன் செயல்படுவீர்கள். உங்கள் புதிய முயற்சி வெற்றியை தரும்.
ரிஷபம் : உங்கள் எதிர்காலம் பற்றி சிந்தித்து நல்ல திட்டங்களை உருவாக்குவீர்கள். தொழில் வட்டாரத்தில் நல்ல தொடர்புகளை ஏற்படுத்தி கொள்ள முயற்சி செய்யவேண்டும். உணர்ச்சியை கட்டுப்படுத்த வேண்டும்.
மிதுனம் : செயல்களை குறித்த நேரத்தில் செய்வதன் மூலம் நல்ல பலன்கள் கிடைக்கும். கவலையை மறந்து அமைதியாக இருக்க வேண்டும்.
கடகம் : இன்று நீங்கள் செய்யும் செயல்களை கவனமுடனும் உரிய நேரத்திலும் செய்ய வேண்டும். அப்படி செய்தால் வெற்றி கிடைக்கும். முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டாம்.
சிம்மம் : இன்றைய நாள் சிறப்பானதாக அமையும். உங்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். அது உங்களுக்கு மகிழ்ச்சியை தரும்.
கன்னி : இன்று உங்கள் செயல்களை செய்வதில் மும்முரமாக இருப்பீர்கள். மகிழ்ச்சியுடன் இருப்பீர்கள்.
துலாம் : முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டாம். கவனமுடன் செயல்களை செய்ய வேண்டும். இன்றைய நாளை திட்டமிட்டு செயல் படுத்துங்கள்.
விருச்சிகம் : இன்று நீங்கள் மந்தமாக காணப்படுவீர்கள். அது உங்கள் வளர்ச்சியை பாதிக்கும். தேவையற்ற உணர்வுகளுக்கு இடம் அளிக்காதீர்கள். எதையும் எளிதாக எடுத்து கொள்ளும்.
தனுசு : இன்றைய அனுபவம் உங்களுக்கு சிறப்பானதாக அமையும். முக்கியமான முடிவுகளை இன்று எடுக்கலாம். நீங்கள் மகிழ்ச்சியுடனும் நம்பிக்கையுடனும் காணப்படுவீர்கள்.
மகரம் : இன்று உங்கள் விருப்பங்கள் நிறைவேறும். நட்பு வட்டாரம் பெருகும். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள்.
கும்பம் : உங்களுக்கு பொறுப்புகள் அதிகமாக இருக்கும். அதனை நினைத்து பயப்பட வேண்டாம். முக்கியமான முடிவுகளை எடுக்க வேண்டாம்.
மீனம் : முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும். அதனை வேறு நாளுக்கு தள்ளி போடுங்கள். எந்த சூழ்நிலையிலும் நம்பிக்கையை இழக்காதீர்கள்